பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மொஹெஞ்சொ - தரோ


கூறலாம்: ஒன்று வெள்ளம் வீட்டிற்குள் எளிதில் வராமல் தடுப்பதற்காக இருக்கலாம்; மற்றொன்று, மொஹெஞ்சொ-தரோ மக்கள் சுமேரியரைப் போலக் குள்ளமானவராக இருத்தல் வேண்டும். மேலும், அவர்கள் மேன்மாடிக்கு இட்ட உத்திரங்கள் தரைமட்டத்திலிருந்து 180 செ. மீ.க்கு உள்ளேயே இருத்தலும் கவனித்தற்குரியது. எனவே பின்னதே பெரிதும் பொருத்தமுடைய காரணமாகும்.[1] வீட்டுக் கதவுகள் எல்லாம் மரக் கதவுகளேயாகும். சிந்துப் பிரதேசத்தில் அப்பழங்காலத்தில் காடுகள் மிகுதியாதலினாலும் வீட்டுச் சுவரின் கனத்திற்கு ஏற்ற கதவு அமைத்தல் கடனாதலாலும் மரக்கதவுகள் மிக்க பருமன் உடையனவாக இருந்திருத்தல் வேண்டும் என்று டாக்டர் மக்கே கருதுகிறார்.

துண்கள்

மொஹெஞ்சொ-தரோவில் காணப்பட்ட துண்கள் எல்லாம் செங்கற்களால் ஆனவையே. அவை பெரும்பாலும் சதுரத் துரண்களேயாகும். சில அடியில் 2700 ச. செ. மீ. ராகவும், மேல் போகப்போக 2250 ச. செ.மீ.ராகவும் உள்ளன. பல முற்றும் 2700 ச. செ மீ பரப்புடையனவாகவே உள்ளன. சுமேரியாவில் அதே காலத்தில் வட்டத்துண்கள் பயன்பட்டன. சுமேரியரோடு நெருங்கிய வாணிபம் செய்துவந்த சிந்துப் பிரதேச மக்கள் அவ்வட்டத் தூண்களைத் தங்கள் இல்லங்கட்குப் பயன்படுத்தாமை வியப்புக்குரியதாகும். தூண்களைத் தாங்கும் கல்வளையங்கள் பல கிடைத்தன். ஆனால் அவை ‘யோனிகள்’ என்று தயாராம சஹனி கூறுகிறார்.[2]

இனி, ஹரப்பா நகரத்து இல்லங்களைப்பற்றிய சில விவரங்களைக் காண்போம்:

  1. Dr. Mackay’s ‘The Indus Civlilization’, p.202.
  2. Ibid. pp.37,38.