பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மொஹெஞ்சொ - தரோ


பெருங் களஞ்சியம்

அறிஞர் ஒரு மண்மேட்டைத் தோண்டியபோது அதன் அடியில் களஞ்சியம் ஒன்று இருக்கக் கண்டனர். இது 50-10 செ.மீ. நீளமும் 4050செ.மீ அகலமும் உடையது. இதன் சுவர்கள் 1560 செ.மீ. உயரமும் 270 செ.மீ. கனமும் உடையன. இவை இரண்டு வரிசை களாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு வரிசைகட்கு இடையே உள்ளதுரம் 690 செ மீ ஆகும். இந்த இடைவெளிக்குமேல் கூரை இருந்திருத்தல் வேண்டும் என்று அறிஞர் எண்ணுகின்றனர். இந்த இரு வரிசை நெடுஞ் சுவர்களுள் ஒவ்வொரு வரிசையிலும் ஆறு மண்டபங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ஐந்து இடைகழிகள் விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டபமும் மூன்று நெடுஞ்சுவர்கள் எழுப்பப்பெற்று நான்கு அறைகள் போலப்பிரிந்து உள்ளது. மண்டபங்களின் தரைப் பகுதியில் மரப்பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அற்புதமான வேலைப்பாட்டுடன் விளங்கும் இம்மண்டபங்கள் தானியங்கள் கொட்டிவைக்கப் பயன்பட்ட களஞ்சியங்கள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இங்கிலாந்திலும் செர்மனியிலும் பண்டமாற்று முறையும், வரிகளைப் பண்டங்களாகவே வாங்கும் வழக்கமும் இருந்த பண்டைக் காலத்தில், அரசியலார், அப்பொருள்களைச் சேமித்து வைப்பதற்காகக் கட்டியிருந்த கட்டிடங்களைப் போலவே ஹரப்பாவில் கட்டப்பட்ட களஞ்சிய மண்டபங்கள் இருக்கின்றன. ஆதலால், இவை அரசியலார் அரசிறைக்காகத் திரட்டப்பெற்ற பண்டங்கள் வைக்கும் களஞ்சியங்களாகவே இருத்தல் கூடும் என்பது அறிஞர் எண்ணமாகும்.

தொழிலாளர் இல்லங்கள்

ஹரப்பாவில் தொழிலாளர் இல்லங்கள் அமைந்துள்ள முறை கவனித்தற்குரியது. ஒரு வரிசையில் ஏழு வீடுகள் இருக்குமாறு இரண்டு வரிசைகள் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. இரண்டிற்கும் இடையில் நீண்ட குறுகிய பாதை ஒன்று