பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மெளனப் பிள்ளையார் ஏழரை மணிக்கெல்லாம் அந்த லாரி கிராவல்’ கற்களைச் சுமந்து கொண்டு கிடுகிடென்ற சத்தத்துடன் அந்தப் பக்கம் வரும். குடிசைக்குச் சமீபம் வந்ததும் ஒரு பெரிய இரைச்சல் போட்டுக்கொண்டு நிற்கும். அதன் டிரைவர் இரவெல்லாம் அப்பாசாமியின் குடிசையில் தங்கி, விடிந்ததும் கிளம்பிப் போய் விடுவான். இப்படி லாரி ஒருமாத காலம் தவருமல் வந்துகொண்டே யிருந்தது. டிரைவரும் அப்பாசாமியும் நெருங்கிய நண்பர் களாயினர். அப்பாசாமி அவனைப்பற்றிக் கொஞ்சம் கொஞ்ச மாக விசாரித்து விவரம் தெரிந்து கொண்டான். பக்கத்து நகரத்தில் ரோட்டுவேலை நடப்பதாகவும் அதற்கு வெகு துரத் திலிருந்து கற்கள் போவதாகவும், இன்னும் நாலு மாத வேலையிருக்கிறதென்றும் டிரைவர் சொன்னன். அந்த டிரைவர் பரம சாதுவாயிருந்தான். அப்பாசாமி யிடமும் பானுமதியுடனும் சர்வ சகஜமாகப் பழகித் தமா ஷாகப் பேசிக்கொண்டிருந்தான். அப்பாசாமிக்கு வேண்டிய சாமான்களை அவனே வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பான். இதனால் அப்பாசாமிக்கு நகரத்துக்கு நடந்து போய்வர வேண்டிய வேலையும் குறைந்தது. ஒரு நாள் டிரைவர் பானு மதியைப்பற்றி அப்பாசாமியிடம் விசாரித்தான். அதற்கு அப்பாசாமி, 'இவள் என் மகள்; குழந்தையா யிருந்தபோதே இவளைவிட்டு இறந்து போளுள் என் மனைவி. அது முதல் இவளை நான்தான் காப்பாற்றி வருகிறேன். அத்துடன் போயிற்ரு ? இன்னுெரு குழந்தையையும் பகவான் என்னிடம் ஒப்படைத்தார். அந்தக் குழந்தை ராஜா வீட்டுக் குழந்தையா யிருக்கணும்; பாவம், போதாத காலம் என்னிடம் வந்து தவித்தது. கடைசியில் அதை ஒரு புண்ணிய வான் வந்து அழைத்துக் கொண்டு போனர். அதற்கப்புறம் அவனைப்பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. அந்தக் குழந்தை என்னிடம் பத்து வருஷ காலம் வளர்ந்தது. பானுவும் அவ னும் இந்தக் கல்லுப் பிள்ளையாரைச் சுற்றிச் சுற்றி விளையாடு வார்கள். நான் சந்தோஷமாய்ப் பார்த்துக் கொண்டிருப் பேன். பானுவும் - அவன் பெயர் ராஜூ - ராஜூவும்