பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனப் பிள்ளையார் 7 ரொம்ப சிநேகமா யிருந்தார்கள். இப்போது ராஜுவைப் பிரிந்து வெகு காலமாகிவிட்டது. பானு சதா அவன் ஞாபக மாகவே இருக்கிருள். எனக்கு அந்தக் கல்லுப் பிள்ளையாரைப் பார்க்கும்போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து விடும்' என்ருன். அப்படியா ? அந்தக் குழந்தை உங்களிடம் எப்படி வந்தான் ? . என்று ஆச்சரியத்தோடு கேட்டான் டிரைவர். அப்பாசாமி அந்தக் குழந்தை வந்த கதையைச் சொல்விப் பெருமூச்சு விட்டான். பானுமதி அதையெல் லாம் கேட்டுக்கொண்டே யிருந்தாள். அவள் முகம் கவலை யால் வாடி யிருந்தது. 競 இதை யெல்லாம் கேட்ட பிறகு டிரைவர், அப்பாசாமி யையும் பானுவையும் ஆறுதல் சொல்லித் தேற்றினன். ஆண்டவனுடைய அருளால் நீங்கள் எப்படியும் ராஜூவைக் காண்பீர்கள் ' என்ருன், அதன் பிறகு அவனுக்கு என்னமோ தன் கதையையும் அவர்களிடம் சொல்லவேண்டும் போலி ருந்தது. எனவே, தன் கதையை ஒன்றுகூட விடாமல் உள்ளது உள்ளபடியே சொன்னன். - 'முப்பேட்டை முதலியார்தான் என்னை வளர்த்தவர். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். தங்கமானவள். ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு அவள் இறந்துவிட்டாள். முதலியார் ஒரு மணிலாக்கொட்ட்ை வியாயாரி. வியாபாரம் நடந்த போது நான் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு வருவேன். அந்த வியாபாரம் நடந்து கொண்டிருந்த சமயம்தான் முதலியார் ஒரு மோட்டார் ல்ாரி வாங்கி என்ன அதற்கு டிரைவராக்கினர். வியாபாரத்தில் மூன்று வருஷங்களுக்கு முன்பு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, கம்பெனியை மூடும்படி ஆயிற்று. அவரிடம் மிகுந்திருந்த இந்த லாரியை என்னிடம் கொடுத்து உன்னை வளர்த்ததற்கு நான் ஆஸ்தியாகக் கொடுப்பது இதுதான் ' என்ருர், -