பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மெளனப் பிள்ளையார் அப்போதுதான் நான் அவருடைய வளர்ப்புக் குழந்தை யென்று தெரிந்துகொண்டேன். முதலியார் இறந்ததும், நான் லாரியை எடுத்துக்கொண்டு கடப்பை ஜில்லாவுக்குப் போய்விட்டேன். அங்க்ே லாரிக்கு வேலை கிடைத்தது. அதைக்கொண்டு பிழைத்து வந்தேன். இப்போது கடப் பைக் கல் வியாபாரம் rணமடைந்து போனதால் இந்தப் பக்கம் வந்தேன்' என்ருன். இதைக்கேட்ட அப்பாசாமி ஆச்சரியமடைந்து, டிரைவர், டிரைவர், உன் பெய ரென்ன ?' என்று விசாரித்தான். என்னைச் சாமிநாதன் என்று வெளியில் கூப்பிடு வார்கள். ஆனால் அந்த முதலியார் மட்டும் ரொம்பப் பட்ச மாக ராஜூ, ராஜூ என்றுதான் அழைத்து வந்தார் ' என்ருன் டிரைவர். உடனே அப்பாசாமி அவனே அப்படியே கட்டிக்கொண் டான். ராஜு, நான் வளர்த்த ராஜுதான் நீ!' என்று அப்பாசாமி சந்தோஷ மிகுதியால் சொன்னபோது அவன் நாக் குழறியது. பானுமதிக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ராஜுவா ?” என்று அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள். - 醬 - சில தினங்களுக்கெல்லாம் ராஜூவுக்கும் பானுமதிக்கும் அரசமரத்தடியில், பிள்ளையார் முன்னிலையில், கல்யாணம் நடந்தது. அப்பாசாமியின் குதுாகலத்தைக் கட்டிப் பிடிக்க முடியவில்லை. - அரசமரத்தின் அருகில் இப்போது ஒரு வேப்பமரம் வளர்ந்து அதைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. பிள்ளையார் அரச மரத்துக்கும் கல்யாணம் செய்துவிட்டு, பானுமதிக்கும் விவாகம் செய்து வைத்துவிட்டுத் தான்மட்டும் பிரம்மசரி யத்தை அனுஷ்டித்து வருகிரு.ர். - இப்போதெல்லாம். அரச மரத்தின் சலசலப்புச் சத்தத் துடன் பானுமதி, ராஜா தம்பதிகள் சிரிப்பின் ஒலியும் கலந்து கொள்கிறது. ஆனால், பிள்ளையார் மட்டும் எப்போதும்போல் மெளனமாகவேதான் இருக்கிருர் ! -