பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாட்சண்யப் பிரகிருதி 19 அவரவர்கள் மூட்டையையும் சாமானேயும் பிரித்து வைத்தான். சுந்தரேசய்யரின் பேத்திக்குக் கொடுத்திருந்த காப்பித் துாளும், பாலகிருஷ்ணன் தந்திருந்த மூக்குத்துள்ளும் ஒன்ருய்ச் சேர்ந்து ஒரே கதம்பமாய்க் கிடந்தது. பாலகிருஷ்ணன் தாத்தாவையும், சுந்தரேசய்யரின் பேத்தியையும் ராமநாதன் கூப்பிட்டு, வேணுமானல் இந்தப் புது மிக்சரைச் சல்லடை போட்டுச் சலித்துப் பிரித்து எடுத்துக்கொள் ளுங்கள் ' என்று அலட்சியமாகச் சொன்னன். பாலகிருஷ்ணன் தாத்தா, ஏண்டா ராமநாதா ? என் பிள்ளை செருப்பு அனுப்பினுனே, அது எங்கே?' என்று கேட்டார். ' செருப்பா ? அனந்தராமய்யர் அனுப்பிய அந்தத் திருட்டு நாய் அதைக் காலில் மாட்டிக் கொள்ளாமல், வாயில் மாட்டிக் கொண்டு முந்தின ஸ்டேஷனிலேயே இறங்கி ஒடி விட்டது. மெள்ளப் போய் அதைக் கண்டுபிடித்து அத னிடம் செருப்பை வாங்கிக்கொள்ளும் ! அப்படியே செளகரி யப்பட்டால் அனந்தராமய்யர் நாயையும் அழைத்து வந்து விடுங்கள் ' என்ருன் ராமநாதன். அம்முப்பாட்டி தந்த பகடினத்திலெல்லாம் ஏகாம்பரய் யரின் மண் எண்ணெய் கலந்து நறுமணம் வீசியது. + இப்படி அமர்க்களமாயிருந்த லக்கேஜிலிருந்து அவர வர்கள் தத்தம் சாமான்களை எடுத்துக்கொள்வதற்குள் மணி மூன்ருயிற்று. - - ராமநாதனைப் பிடித்த சனியன் அன்ருேடு சமாப்தி யாயிற்று. அதுமுதல் அவனிடம் யாரும், சாமான் எடுத்துப் போகிருயா ?’’ என்று கேட்டதே கிடையாது.