பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒண்டுக் குடித்தனம - 23 குழாயும் உண்டு, ஜலமும் வரும்' என்று பதில் கூறினேன். 'சுவரில் மூட்டைப்பூச்சி இருக்கும் போலிருக்கே ' என்ருர். எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. அடக்கிக் கொண் டேன். 'ஊஹகும், பேசக்கூடாது ஒரு பூச்சிகூட இங்கே நாடாது' என்றேன். சாக்கடையைத் தினம் சுத்தம் பண்ணுகிறீர்களோ ?’’ என்று கேட்டார். இந்த வீட்டில் நான்தான் சாக்கடை வாருகிறவன் என்று நினைத்துக்கொண்டார் போலும். 'இதோ பாருங்கோ வாராவாரம் சுத்தம் பண்ணுவ துண்டு. நீங்க ஒண்ணுமே கேட்க வேண்டாம். என் வீட்டை போலச் சுத்தமான வீட்டை இந்த டவுனிலே வேறு எங்குமே கண்டுபிடிக்க முடியாது. நீங்க வேண்டுமானல் வந்து குடித்தனம் இருந்து பாருங்கோ. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்ருல் வாடகையே கொடுக்கவேண்டாம் ஸார், இருந்துவிட்டுச் சொல்லுங்கோ' என்றேன். - 'உம்; கிணற்று ஜலம் உப்பாயிருக்குமோ?’ என்ருர். ஒரு டம்ளர் கிணற்று ஜலத்தை எடுத்துக்கொண்டு வந்து, சாப்பிட்டுப் பாருங்கோ' என்றேன். ஜலம் பரவாயில்லே' என்று கூறி, ஆமாம், இங்கே சத்தம் கித்தம் ஏதாவது உண்டா ? அல்லது ஒன்றுமில்லாமல் இடிஞ்ச கோவில் மாதிரி நிம்மதியாயிருக்குமா?' என்று பதில் சொல்ல முடியாதபடி கேட்டார். சத்தம் உண்டு என்று சொல்வதா? சத்தமே கிடையாது என்று சொல்வதா ? - - நான் வீ ட் டு க் கு ச் சொந்தக்காரளுயிருந்துகொண்டு இந்த மனுஷன் என்னைக் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு இஷ்டமில்லை.