பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மெளனப் பிள்ளே யார் கடைக்காரனுக்கும் நாகராஜனுக்கும் தர்க்கம் முற்றுகிற சமயம் பார்த்து அந்த இடத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. நாகராஜன் திரும்பிப் பார்த்தான். காரின் பின் வnட்டில் தேவிகாராணியைப்போல் டிரஸ் செய்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் ஒரு ஸ்திரீ, கார் சட்டென்று வந்து நின்ற வேகத்தில் அவள் காதில் அணிந்திருந்த பெரிய பெரிய குண்டலங்கள் முன்னும் பின்னும் ஊசலாடின. நாகராஜன் சண்டை யெல்லாம் மறந்து, தான் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்றுகூடப் பிடிபடாமல் ஸ்தம்பித்து நின்றன். அவனு டைய கை சட்டென்று கலைந்திருந்த தன் கிராப்புத் தலை யைத் தடவி ஒழுங்குபடுத்தியது. இதற்குள் காரிலிருந்த ஸ்திரி ஒரு தோல் பையிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கடைக்கார னிடம் கொடுத்து, இந்தா, நேற்றுக் கொடுத்தாயே ருமானி, அந்த ஜாதிப் பழத்தில் நூறு பழம் கொடு ' என்ருள். கடைக்காரன் நாகராஜனை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்து விட்டுப் பழங்களே எண்ணி ஒரு கூடையில் போட்டான். காகாஅனுடைய மனம் அந்த ஒரு மி ஷ ம் படாதபாடு பட்டது. ஆயிரம் சந்தேகங்கள் தோன்றி மறைந்தன. இந்த ஸ்திரீயை எங்கோ பார்த்திருக்கிருேம். அடிக்கடி பார்த்தது போலல்லவா ஞாபகம் இருக்கிறது ? ஒரு வேளே......ஆமாம்...... சந்தேகமில்லை ; அ வ ேள தா ன். வினிமா நகத்திரம் மிஸ். கே. பி. மோஹினிதான். சந்தேகமே இல்லை' என்று எண்ணினன். உடனே தன்னுடைய கையெழுத்து வேட்டைப் புஸ்த கத்தை எடுத்து அவளிடமிருந்து ஒரு கையைழுத்து வாங்கி விடுவதென்று தீர்மானித்தான். ஆனல் பின்ளுேடு ஒரு GuTFಒT குறுக்கே தோன்றி அந்த எண்ணத்தைத் தடுத்தது.