பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மெளனப் பிள்ளையார் ஆசிரியரும் அடுத்த வாரமே ரொம்ப சந்தோஷத்தோடு விலாசத்தைப் பிரசுரித்திருந்தார். o: o o காரில் பறந்து சென்ல ஸ்திரி தன் வீடு சென்றதும், அம்மா...அம்மா...' என்று அவசரமாகக் கூப்பிட்டாள்.

  • ஏன் !' என்று அவளுடைய தாயார் கேட்டுக் கொண்டே வந்தாள்.

இன்று பழக்டையில் யாரோ ஒருவன் என்னே அடை ய r n ம் கண்டுகொண்டு, ' தாங்கள்தானே கே. பி. மோஹினி ? என்று கேட்டுக் கொண்டே ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொன்னன். என் பாடு பெரிய ஆபத் தாய்ப் போய்விட்டது. நான் என்ன செய்தேன் தெரியுமா? சாமர்த்தியமாக, "நானில்லை மோஹினி நான் அவளுடைய தங்கை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு பறந்து வந்து விட்டேன். எனக்கு ரொம்ப அவமானமாகப் போய் விட்டதம்மா. கையெழுத்துப் போடக்கூடத் தெரியாமல் இருக்கிறேனே என்று மிகவும் லஜ்ஜையாக இருக்கிறது. கையெழுத்துப் போடத் தெரிந்திருந்தால் இப்படி அவனை ஏமாற்றிவிட்டு வந்திருக்கவேண்டியதில்லை அல்லவா ?” என்ருள். "பரவாயில்லை ; கையெழுத்துப் போடத் தெரியாம லேயே நீ இவ்வளவு பணம் சம்பாதிக்கிருயே, அதுவே போதும் ' என்று தாயார் தேறுதல் கூறினள். 熔 வாரப் பத்திரிகையில் வெளி வந்த விலாசத்தை எடுத் துக்கொண்டு நாகராஜன் பஸ் ஏறிப் பூந்தமல்லிரோடுக்கு மிஸ் கே. பி. மோஹினியைப் பார்க்க ஓடினன். எப்படியும் பார்த்துப் பேசி, ஒரு கையெழுத்து வாங்காவிட்டால் என் பெயர் நாகராஜன ?' எள்று எண்ணிக்கொண்டு போனவன், மேற்படி விலாசத்தில் மிஸ் மோஹினி இல்லாததைக் கண்டு மனமுடைந்து வீடு திரும்பினன். பாவம், அவனுக்கு என்ன தெரியும் ?