பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மெளனப் பிள்ளையார் 'ஸம்சயாத்மா விநச்யதி என்று பகவான் ஏன் சொன்னர் ? நம்பிக்கையற்றவன் நாசமடைவான் என்பதுதானே அதன் தாத்பர்யம் ? ஆகையால் எதிலும் நம்பிக்கை வை, அது ஸ்வப்பனமாயிருந்தால் என்ன, பனங் கற்கண்டாய் இருந் தால் என்ன ? நம்பினவன் மோசம் போகான் என்று இப்படி யெல்லாம் களுக்கண்டு வந்தான் சங்கரன். ஒரு நாள் கனவில் ஒரு குள்ள உருவம் சங்கரன்முன் சான்னித்யமாயிற்று. அது யார் ? அவர்தான் ஆயுர்வேதப் பிதா அகத்தியமா முனிவர். சங்கரன் ஸ்வப்பனத்தில் தோன்றி, அப்பா, இந்தா இந்த ஏனத்தை வைத்துக் க்ொள். நீ கடவுளை நம்புகிருய் அதற்குப் பதிலாகக் கடவுள் என்னே இந்த மருந்தை உன்னிடம்கொடுத்துவரச் சொன்னர். இதற்கு அகத்திய கல்பத்வஜம் என்று பெயர். நீ நாளே முதல் கடவுளின் கட்டளேப்படி வைத்தியணுகி இந்த உலகுக்கு உதவி புரிவாயாக. அவரவர்கள் சக்திக்குத் தக்கபடி கொடுக்கும் பணத்தை உன் வயிற்றுப் பிழைப்புக்கு உபயோ கித்துக்கொள் ' என்று சொல்லி மறைந்தார். கண் விழித்துப் பார்த்தான் சங்கரன். அங்கே அகஸ்தி யரையும் காணுேம். அவர் கொடுத்த ஏனத்தையும் காளுேம். ஸம்சயாத்மா விநச்யதி - சந்தேகப் படுகிறவன் நாசமடைவான். ஏன் அகஸ்தியர் கொடுத்த ஏனம் இல்லை யென்று சந்தேகப்பட வேண்டும்? அவர் கொடுத்தால்தான் அது இருக்கவேண்டும்ா ? கொடுக்காமலேயே அது இருக்கக் கூடாதா ? - - - . இதோ என்று சங்கரன் திரும்பிப் பார்த்தான். சமை யலறை அலமாரியில் அவன் மனைவி வைத்திருந்த மிளகு ஏனம் தென்பட்டது. ஆ அகத்தியர் இன்று காட்டியதும் இந்த அருமை ஏனம்தானென்று நம்பினன். இதோ வைத்தி யஞனேன்! இன்றே இதை உலகத்திற்கு அறிவிக்கிறேன் என்று ஒரு கரும் பலகையில், அகத்திய கல்பத்வஜம் ; தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும். அகத்தியர் கனவில் தோன்றி அருளிச் செய்த மருந்தைச் சாப்பிட்டு இன்றே உங்கள் வியாதிகளைப் போக்கிக் கொள்ளுங்கள் : என்று