பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மெளனப் பிள்ளே யால் கட்டில் ஓர் அம்மி இருக்கிறது. அங்கே போய் உமக்கு வேண்டிய துவையலை அரைத்தக் கொள்ளும் என்ருர். இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு சபாபதி அய்யர் வீடு பார்க்க வந்தவரிடமிருந்து அட்வான்ஸ் பனம் பன்னிரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டார். முன் பனம் கொடுத்துவிட்டுப் போன சங்கர ராவும் முதல் தேதி யன்று சக குடும்ப சமேதராய்ச் சபாபதி அய்யர் வீட்டில் கிரகப் பிரவேசம் செய்தார். சபாபதி அய்யர் வீட்டில் மூன்றுமாத காலமாகக் காலி வாய்க் கிடந்த பாகம் இப்போது வாடகைக்கு விட்டாயிற்று. அவரது தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீட்டிலிருந்து இனி மாதம் பிறந்தால் முழுசாக 6.5 ரூபாய் வாடகை கிடைத்து விடும். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு வரையில் சபாபதி ஆயர் மேற்படி வீட்டில்தான் குடியிருந்தார். அப்போதெல் , அவர் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்தார். மாதச் சம்பளம் 150 ரூபாய் கிடைத்தது. அவர் இப்பொழுது சரிடையர்' ஆகிவிட்டதால் பென்ஷன் பணத்தை வைத்துக் கொண்டு குடும்பச் செலவு போக, பாங்கியில் பணம் போட்டு ஆவக்க முடியாதாகையால், தம்முடைய வீட்டை வாட இகக்கு விட்டு விட்டுக் கோடம்பாக்கத்தில் தமக்காக 26 ரூபாயில் ஒரு தனி 'வீட்டைப் பார்த்துக் கொண்டார். தம்முடைய வீட்டிலிருந்து வந்த வாடகை 6.5 ரூபாயில் 26 ரூபாய் போனலும் மிச்சப் பணம் லாபந்தானே? இந்த இத்தேசத்தோடுதான் அவர் கோடம்பாக்கத்துக்குக் குடி போளுர், . சென்ற மூன்றுமாத காலமாக, சபாபதி அய்யர் வீட்டில் ஒரு பாகம் காலியாகவே இருந்ததால் மாதம் பன்னிரண்டு சூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே என்று அவர் நினைத்துக்கொண் டிருந்த சமயத்தில்தான். சங்கர ராவ் அந்த பாகத்தை வந்து பிடித்துக் கொண்டார். ஆளுல் குடி வந்து மாதம் இரண் டாஒயும் ஒரு தம்படிகூட அவர் வாடகை கொடுக்கவில்லை.