பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மெளனப் பிள்ளையார் அந்தத் திருவிழாக் கூட்டத்தில் பூங்காவனத்தைச் சந்தித்து, வளையல் போட்டுக்கொள்ள வேண்டுமென்று ஒரு ரூபாய் கடகை வாங்கிக் கொண்டாள் பொன்னி. பூங்காவனமும் மிகுந்த சந்தோஷத்துடன் ஒரு ரூபாயைத் தன் சுருக்குப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். திரு விழா முடிந்து வெகுநாள் வரை அவன் அந்த ரூபாயைத் திருப்பிக் கேட்கவேயில்லை. - 塔 ங்காவனம் ஒரு பெரிய தோட்டம் வைத்துப் பயிர் செய்து வந்தான். அதில் அந்த வருஷம் கத்தரி நாற்றுக்கள் நட்டிருந்தான். நாற்றுக்கள் ரெர்ம்பவும் வளப்பமாக இருந்தன. பச்சைப் பசேலென்று இருந்த அந்தத் தோட்டத் தில் ஒரு நாள் ஏழெட்டு ஆடுகளும் குட்டிகளுமாய்ப் புகுந்து கத்தரிச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. இ ைத க் கண்ட பூங்காவனத்திற்குக் கோபம் அளவுக்கு மீறி வந்து விட்டது. ஆடுகளை அப்படியே மடக்கி ஒட்டிக்கொண்டு போய்ப் பவுண்டுக்குள் அட்ைத்து விட்டான். கோபத்தில் அந்த ஆடுகள் யாருடையவை என்றுகூடக் கவனிக்கவில்லை. அவை பொன்னியினுடைய ஆடுகள் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு நிர்த்தாட்சண்ய மாகப் பவுண்டில் அடைத்திருக்க மாட்டான். பூங்காவனத்தின் தாட்சண்யமற்ற இந்தக் காரியத்தினுல் பொன்னி மணியக்காரர் காலில் விழுந்ததோடில்லாமல், பூங்காவனத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று வைத்திருந்த ஒரு ரூபாயையும் தண்டம் அழுது ஆடுகளே மீட்டுக்கொண்டு வந்தாள். பூங்காவனமா இப்படிச் செய்தது? பாவம் ! என்னுடைய ஆடுகள் என்று தெரிந் திருந்தால் பவுண்டில் அடைத்திருக்க மாட்டார் ' என்று நினேத்தாள். எப்படியோ ஒரு ரூபாய் தண்டம் அழுதா யிற்று. அவை பொன்னியிடைய ஆடுகள் என்று தெரிந்ததும் பூங்காவனம் தன்னுடைய கோபத்தை நினைத்துப் பெரிதும்