பக்கம்:யயாதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 யயாதி வேண்டும். கருணேக் கடலே, தமது புதல்வியும், இந்நகர வாசிக்ளும், அடியேனுங் துக்க சாகரத்தில் மூழ்கா வண்ணம், மஹாராஜா அறியாமற் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும். (வெளிவந்து சக்ராசாரி பாதத்தில் வீழ்ந்து) எமது குலத்தை யீடேற்ற வந்த குருவே! அபயம்! அபயம்! சுவாமி, குற்றஞ்செய்தவள் நானே, மஹாராஜாவின்மீது ஒரு குற்றமுமில்லையே. நானன்ருே, அவரை தமக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தினின்றுங் கவறச் செய் தேன் ? சுவாமி குற்றம் ஒருபக்கமும், கண்டனே ஒருபக்கமும் இருக்கலாமா? கிருபா மூர்த்தி என்னேத் தண்டியும். என் பிராணநாதருக் கிட்ட கொடிய சாபத்தை நீக்கியருளும். தெய்வயானை, நீயும் உன் தந்தையைவேண்டிக்கொள். ஐயோ! நமது கண வருக்குச்சாபம் நேர்ந்தால் நமக்குத்தானே துன் பம்? அவருடன் இத்துன்பத்தை அனுபவிக்க வேண்டுமன்ருே? நான் உனக்குச் செய்த கொடுமை களை யெல்லாம் மறந்து என்னுடன் சேர்ந்து நீயும் உன் தந்தையை வேண்டிக்கொள். சன்மிஷ்டை, நீ கூறுவது உண்மைதான். எனக்கு வந்த கோபத்தால் நான் அதை மறந்தேன்.--தங் தையே! சான் ஏதோ கெடுமதியில்ை உம்மிடம் வந்து முறை யிட்டேன் மேல் நடக்கப்போகின்ற காரியம் அறியாது. தங்தையே, என் பிராணநாத ருக்கு நீர் கொடிய சாப மிட்டுவிட்டீரே, அதை காங் க்ளும் அவருடன் அனுபவிக்கவேண்டி வந்ததே! g೬LI: 5ುರ್ರೆ புத்தியற்று அறியாத் தன்மையால் இதைச் செய்துவிட்டேன். மன்னிக்கவேண்டும். அண்ணு, எப்படியாவது நீர் இட்ட சாபத்தை நீக்கி யருளும் எம்மீது அருள்புரியும் அருள் புரியும்! (தனக்குள்) சி நானும் என்ன தீர்க்க யோசனை செய் யாது சாபமிட்டுவிட்டேன். முன் பின் பாராமல் வந்த கோபாவேசத்தால் எனது மருகனுக்கே தீங்கு விளைத்துவிட்டேன்! இனி என்ன் செய்யலாம்? (யயாதியை நோக்கி) யயாதி, இது ஊழ்வினையென்று நாம் கருதவேண்டும். கான் நன்முய்ச் சமாசாரத்தை விசாரிய்ாமலும் பின் வருவதை யோசியாமலும் உனக்குச் சாப மிட்டுவிட்டேன். இனி என்னல் அச் சாபத்தை நீக்க முடியாது, கடந்த காரியத் கைப்பற்றி இனி வருத்த்ப்படுவதிற் பயனென்ன ? ஆயினும் ஒன்று சொல்கிறேன். கேள். உன். மக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/46&oldid=885929" இலிருந்து மீள்விக்கப்பட்டது