பக்கம்:யயாதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恶町。 யயாதி 45 கள் யெளவனதிசையை யடைந்தபின் அவர்களுள் எவனுக்காவது உனது விருத்த திசையை சிலகாலம் வஹித்திருக்கும்படி கொடுத்து, அவனது யெளவன திசையை நீ வாங்கிக்கொண்டு, சின்னுள் உனது மனைவிகளுடன் சகித்திரு. பிறகு புழயபடி இளமை யைக் கொடுத்துவிட்டு உனது விருத்த திசையை ஏற்றுக்கொள். இவ்வண்ணம் உனது முதுமையை யேற்ற மகனுக்கு உனது ராஜ்ஜியத்தை ஒப்பித்து விட்டு, நீ உன் மனைவியருடன் கானகஞ் சென்று தவம் புரிந்து நற்கதி யடைவாய்! சுவாமி, தமது சித்தத்தின்படி நடக்கின்றேன். தமக்குக் கமியேனிடம் இவ்வளவு அருளிருப்பது எனது முன்னேர் செய்த பூஜாபல னென்றே கருத வேண்டும். சுவாமி, எமது வேண்டுகோளுக் கிரங்கி அருள் புரிந்த தமக்கு காங்கள் என்ன கைம்மாறு செய்யப்ப்ோ கிருேம் ? குலகுருவே, இவ்வளவாவது தமது சித்த மிரங்கிற்றே! தெய்வயானை, நீ சற்று பொறுமையுள்ளவளா யிருந் தால் இவ்வளவு அாரம் நடந்திராதே. இனியாவிது பிறர் செய்யுங் குற்றத்தைப் பொறுத்திடுங் குண முடையவளாயிரு. நீ முன்பின் யோசியாமல் என் னிடம் வந்து முறையிட்டமையால், நானும் தீர்க்கா லோசனை செய்யாது சாப மிட்டேன். இப்பொழுது அச்சாபத்தை அனுபவிப்பவர்கள் யார்? போன்து போகட்டும். இனி நீயும் சன்மிஷ்டையும் சச்சர விடாமல் ஒருமையாய் ஒத்து வாழுங்கள்.-யயாதி, உன்னிரண்டு மனேவியரையும் இரண்டு கண்கள் போல் பாவித்து வா. - சுவாமி தமது உத்திரவின்படி. தெய்வயானை, நான் உனக்குச் செய்த தீமைகளை யெல்லாம் இனி யாகிலும் மன்னிக்கவேண்டும். சன்மிஷ்டை, முடிவில் கானன்ருே தெரியாமையால் உனக்குத் தீங்கிழைத்தேன். நீயே என்னை மன் னிக்கவேண்டும். - யயாதி ராஜனே, நான் விடைபெற்றுக் கொள்ளு கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/47&oldid=885931" இலிருந்து மீள்விக்கப்பட்டது