பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

. (இதனுள் வாழ்க்க பொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாகார் . என்னும் இறுதிச்சொல் இடை இடையும் முதலுஞ் சென்று பொருள்

  1. i. H H-H H - # * கொண்டமையால் அளை மறிபாப்புப் பொருள்கோள்.)

7) காப்பிசைப் பொருள்கே ாள்: நடு கிற்கும் சொல் முதலும் இறுதியும் சென்று பொருள் கொள்வது காப்பிசைப் பொருள் கோளாகும். H உ-ம்: உண்ணுமை யுள்ள துயிர்கிலை யூனுண்ண அண்ணுத்தல் செய்யா தளறு . (இதில், ஊனே உண்ணுமை உள்ளது உயிர்நிலை’ எனவும், ஊனே உண்ண வண்ணுத்தல் செய்யாதளறு. எனவும் ஈடுகின்ற ஊன் என்னும் சொல் முதலும் இறுதியும் சென்று பொருள் கொண்டமையால், இது காப்பிசைப் பொருள்கோளாகும்.)

  • 8) கொண்டு கூட்டுப் பொருள்கோள்:

சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது. உ-ம்: தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணி வாமே வங்கத்துச் சென்ருர் வரின் . (இதனுள், அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் எனவும் தெங்கங்காய்........ .வெண்கோழி முட்டையுடைத் கன்னபசலே’ எனச் சொற்களைக்கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.)