பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


|சாற்பத்து மூன்று, பாக்கள் ஐந்து, பாவினங்கள் மூன்று, வண்ணங்கள் நாறு, பொருள்கோள் ஒன்பது, விகாரங்கள் ஆறு, வனப்புக்கள் எட்டு-இவை அனைத்தும் யாப்பருங்கலக்காரிகையில் சொல்லப்பட்ட பொருள் களாகும். சூத்திரம் "எழுத்துப் பதின் மூன் றிரண்டசை சீர்முப்ப கேழ்தளையைக் கிழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமூன் ருெழுக்கிய வண்ணங்க ணுாருென்ப கொண்பொருள் - கோளிருமூ வழுக்கில் விகாரம் வனப்பெட் டியாப்புள் வகுத்தனவே. (சூத்திரத்தில் ஐந்திழுக்கிலடி” என்று சிறப்பித்த வகல்ை திணை வழுவும், பால் வழுவும், மரபு வழுவும், விை வழுவும், விடை வழுவும், கால வழுவும், இட வழுவும் என்று சொல்லப்பட்ட எழு வழுவும் படாமற் புணர்க்கப் படும் எனக்கொள்ளவேண்டும். வழுக்கில் விகாரம்’ என்று சிறப்பித்தவகளுல், எழுத்துக்குற்றம், சொற்குற்றம், பொருட் குற்றம், யாப்புக் குற்றம், அலங்காரக் குற்றம், ஆனந்தக் குற்றம் என்னும் ஆறு குற்றமும் படாமல் புணர்க்கப்படுஞ் செய்யுட்கள், என்பது பெறப்படும்.) 1) ஆனந்தக் குற்றம் : செய்யுளிலே அமைக்கப் பட்டிருக்கும் பொருட்குக் கேடு பயக்கும் குற்றம் ஆனந்தக் குற்றமாகும். ஆனந்தம்கேடு, சாக்காடு. அஃது எழுத்தானந்தம் சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தாக்கானந்தம், தொடை யானங்கம் என அறுவகைப்படும். அவற்றுள் முக்கிய மானவை எழுத்தானந்தமும் சொல்லானங்கமுமாகும்.