பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


வருணிக் துப் புகழ்வது வண்ணகமாகும். முடுகிச் செல்லும் இயல்புடையது முடுகியலாகும். அடுக்கியல் சீர்கள் செறிந்து கிற் கு மா று அடுக்கப் படும் இயல்புடையது. இதற்கு அடி அளவடி முதலியன. அடிகளுக்குச் சுருக்கம் கா ன்கென்றும், பெருக்கம் எட்டென்றும் கூறுவர் 39) வஞ்சிப்பாவின் இலக்கணக்கை அது கூறப்பட்டுள்ள இடஞ்சுட்டி எழுதுக. அல்லது வஞ்சிப்பாவின் இலக்கணம் எழுதி உதாரணம் தருக [Int. 1950] வஞ்சிப்பாவிற்குரிய இலக்கணம் உறுப்பியலில் 14-வது சூத்திரமாகிய வெள்ளைக் கிரண்டடி என்னும் காரிகையினும், செய்யுளியலின் முதற் குக்கிரமாகிய வெண்பாவகவல் என்னும் காரிகையினுள்ளும் கூறப் பெற்றுள்ளது. வஞ்சிப்பாவிற்கு மூன்றடியே சிறுமை என்பதும், மயேச்சுரர் முதல்ாகிய ஒருசார் ஆசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும் என்ருர் என்பதும், உறுப் பியலில் கூறப்பெற்றன. செய்யுளியலின் முகம், சூத்திரம், வஞ்சிப்பா இரு சீரடியானும், முச்சிாடியானும் வாப் பெறும் என்றும், வஞ்சிப்பா தாங்கலோசையால் வரும் இரு சீரடியானும், தாங்கலோசையானும் வருவது குறளடி வஞ்சிப்பா ஆகும். முச்சீரடியானும் தாங்க லோசையானும் வருவது சிந்தடி வஞ்சிப்பா ஆகும்.