பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


கலிப்பா இடையில் விளமும் இறுதியில்கனியும் வந்தாகின்ற சீர்களாகிய கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் வாய் பாட்டு வஞ்சிச் சீர்கள் இாண்டும் கலிப்பாவிலே சென்று.வி.ரவி நிற்பன ஆகா. எனவே மற்றைத்தேமாங்கனி, புளிமாங்கனி என்னும் வஞ்சிச் சீர்களும், தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் அகவற் சீர் க ளு ம் சிறு பான்மை கலிப்பாவிலே வந்து விாவும் என்பது பெறப் படும். அகவற்பா கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் சீர்கள் இாண்டும் அகவற்பாவிலும் சென்று விாவி நிற்பன ஆகா. எனவே மற்றைத் தேமாங்கனி, புளிமாங்கனி என்னும் வஞ்சிச்சீர்களும் வெண்சீர்களும் அகவற்பாவிலே சிறு பான்மை வந்து விரவும் என்பது பெறப்படும். வெண்பா வெண்பாவிலே கனிச்சிர் எனப்படும் வஞ்சிச்சீர் புகுர்து விரவுமாயின், செப்பலிசையாகிய அதன் இலக் கணம் சிதைந்து வேருய்விடும். எனவே வெண்சீரோடு விாவியும், தனித்தும் அகவற்சீர் வெண்பாவிலே வரும் என்பது பெறப்படும். o மேலே கூறப்படாத பாவாகிய வஞ்சிப்பாவும், பாவினங்களாகிய துறை தாழிசை விருத்தங்களுமாகிய எல்லாம் சுத்தம் சீர்களோடு பிற சீர்களும் வந்து மயங்கி நிற்கப்பெறும்.