பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 யாரால்? யாரால்? யாரால்? வழக்கங்களுந்தான் இந்து மதம் என்று அவர்களிலேயே ஒரு சாராரும் - வேதமும், ஸ்மிருதிகளும், புராணங்களும்தான் இந்து மதம் என்பதோடு-மனு தர்ம சாஸ்திரம் தான் இந்து மதத்திற்கு சாஸ்திரம் (சட்டம்) என்றும் அவர்களி டையே வேறொரு சாராரும் கூறி அவைகளை நடப்பாக்கி சொல்ல சுருக்கமாகச் வருகிறார்கள். வேண்டுமானால் வர்ணாஸ்ரம தர்மம் என்ற முறை இல்லாவிட்டால் மதம் என்று சொல்ல எதுவுமேயில்லை இந்து பெரியாரின் இந்த உரையிலிருந்து என்ன தெரிகிறது? வர்ணாஸ்ரமக் கொள்கைதான் மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஆதிக்கம் பெற்ற ஒரு பிரிவினர், மற்ற பிரிவினரை அடிமைகளாகவும் தொழும்பர்களாகவும் நடத்திட வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது என்றும் - அதற்கு “இந்து மதம்” என்ற பசுத்தோலை, உயர்சாதிப் புலிகள் போர்த்திக் கொண்டு உலவுகின்றன என்றும் தெளிவாகப் புரிகிட தல் லவா? இந்துமத ஆராய்ச்சியைப் பெரியார் நடத்தியதற்குக் காரணமே, அந்த மதத்தின் பெயரால் நால் வருணங்கள் வகுத்து ஐந்தாவதாக ஒரு வருணம் என்று பழங்குடிமக்களைப் பஞ்சமர்கள் என்று ஒதுக்கியும் தீண்டத்தகாதவர்களாக ஆக்கியும் நடைபெறுகிற கொடுமையைக் கண்டித்து அகற் றத்தான் என்பதை "சேர போன்றவர்கள் அறியாமல் இருக்க முடியாது! ஆனால் அன்று கட்டிய அந்த ஆதிக்கக் கோட்டையைப் பெரியார் அசைத்துக் குலைத்து ஆட்டம் காணச் செய்துவிட்டாரே என்ற ஆத்திரம்; மீனாட்சிபுரத்திற் குக் காரணம் இந்துமதக் கொடுமைதான் என்பதை மறைத்து விட்டு, அந்தக் கொடுமையை எதிர்த்த பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் அவர்கள் கண்ட கழகங்கள் இரண்டையும் மனம் போனபடி தாக்கி எழுதிட வைக்கிறது? அடடா! எவ்வளவு காலம் அனுபவித்த சுகம்! வளம்! விதைக்காமல் விளையும் கழனியாக இருந்த நிலை மாறுகிறது என்றால் நெற்றிக் கண்ணைத் திறக்கத்தானே செய்வார்கள்! அதைத்தான் நண்பர் 'சோ'வின் "CL"> இதழ்க் கட்டுரை ஒளிவுமறைவின்றி உணர்த்திக் கொண்டிருக்கிறது! தீண்டாமை ஒழிப்புக்காக வைக்கத்து வைதீக வெறியர் களின் வீதியிலே படை நடத்தி வெற்றி கண்ட வைக்கம் வீரர் பெரியாரைப் "பாவச் சின்னம்" என்றும் -- அந்தப் பாவச் சின்னத்தில் பிறந்ததுதான் அண்ணா அவர்களால்