பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 7 காற்று, காற்றின் அமுக்கம் இவற்றின் படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் - வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதனவற்றுள் ஒன்ருகிய காற்றுக் கடலின் அடிமட்டத்தில் நாம் வாழ்கின்ருேம். மனிதனும் தன்னுடைய அன்ருட வாழ்வின் பல்வேறு செயல்களில் காற்றின் அமுக்கத்தைப் பயன்படுத்துகின்ருன். ஆகவே, காற்றும் காற்றின் அமுக்கமும் ஒவ் வொரு சிறுவன் அல்லது சிறுமியின் படிப்பிற்குரிய ஒரு பாடமாக இருத்தல்வேண்டும். A. காற்று எங்குக் காணப்பெறலாம் என்பதைக் காட்டுதல் 1. ஒரு குறுகிய கழுத்தினையுடைய புட்டியின் வாய் தலைகீழாக இருக்குமாறு வைத்துக் கொண்டு, அதனை ஒரு சாடியிலுள்ள நீரினுள் அமிழ்த்துக. புட்டியின் வாயை நீரின் மட் டத்தை நோக்கி மெதுவாகச் சாய்த்திடுக. நீங்கள் எதனைக் காண்கின்றீர்கள் ? புட்டி வெறுமையானதாக இருந்ததா ? 2. ஒரு கட்டி மண்ணினை நீருள்ள கொள் கலனில் வைத்து உற்றுநோக்குக. மண்ணில் காற்றின் இருப்பை குறிப்பிடக்கூடியவாறு ஏதாவது ஒன்றனைக் காண்கின்றீர்களா ? 3. ஒரு செங்கல்லக் கைவசப்படுத்தி, அதனை ஒரு நீருள்ள கொள்கலனில் வைத்திடுக. செங்கல்லினுள் காற்று இருந்தது என்பதற்கு ஏதாவது சான்று உள்ளதா ? 4. ஒரு கண்ணுடிப் பாத்திரத்தை நீரால் நிரப்பி அதனை அண்மையில் வைத்துக்கொண்டு உற்றுநோக்குக. அந்தக் கண்ணுடிப் பாத்திரம் பலமணி நேரம் ஒரு வெது வெதுப்பான இடத் தில் அப்படியே இருக்கட்டும். மீண்டும் உற்று நோக்குக. நீங்கள் என்ன வேற்றுமையைக் காண்கின்றீர்கள்? நீர் காற்றினைக் கொண் டுள்ளது என்பதற்கு ஏ த | வ து சான்று உள்ளதா ? B. காற்று வெளியை (Space) அடைக்கின்றது என்பதைக் காட்டுதல் 1. ஒரு புட்டியினையும் ஒரு புனலையும் கை புட்டியின் கழுத்தில் புனலை வைத்திடுக. புனலைச் சுற்றியுள்ள இடத்தை மாதிரி உருவம் அமைக்கும் களிமண்ணினல் நிரப்புக. புட்டியின் கழுத்தில் ஈரக் களிமண் இறுக்கமாகத் திணிக்கப்பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்க. புனலினுள் மெது வாக நீரினை ஊற்றுக. நீங்கள் என்ன காண் கின்றீர்கள் ? காற்றினைப்பற்றி இஃது எதனைக் காட்டுகின்றது ? - வசப்படுத்துக. 2. சோதனை 1 ஐத் திரும்பவும் செய்திடுக ; புனலின் உச்சிவரை நிரம்பும்படி அதனுள் நீரை ஊற்றுக. உருவம் ΧΙΙ களிமண்ணின் வழியாகப் புட்டியின் உட் புறத்திற்கு ஒர் ஆணியைக் கொண்டு கவனமாக நீங்கள் என்ன கண் ஒரு துளையின இடுக. அமைத்திடும் டிர்கள்? அஃது ஏன் நிகழ்ந்தது? 89