பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A னாளிலேக் கருவிகளையும் வானிலை நிலையத்தினையும் இயற்றுதல் அமைத்துக் குச்சியின்மீது அது சமனிலையாகப் பொருந்தும் இடத்தை அடையாளமிடுக. மருந்து சொட்டும் குழலின் கண்ணுடிப் பகுதியை மட்டிலும் கைவசப்படுத்தி அதன் சிறிய முனையை ஒரு வாயு அல்லது சாராய விளக்குச் சுவாலேயில் சுழற்றி அடைத்துவிடுக. காற்றுத் திசைகாட்டி சமநிலையாகப் படிந்த இடத்தில் குச்சியின் வழியாக மருந்து சொட்டும் குழலைவிடச் சற்றுப் பெரிதாகவும் சுமார் அதன் முக்காற்பகுதி நுழையும்படியாக வும் ஒரு துளையினை இடுக. குழலின் சிறிய முனையைத் துளையில் வைத்து அதனைக் கோந்து அல்லது ஒருவகைச் சாந்தினைக் (putty) கொண்டு உறுதியாகப் பொருத்தி விடுக. உங்கள் காற்றுத் திசைகாட்டியின் தாங்கு சட்டத்தை இயற்றுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு மென் மரச்சட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதன் உச்சியின்மீது ஒரு சிறிய ஆணியை அடித்திடுக. ஒர் அரத்தினைக் கொண்டு ஆணியின் முனையைக் கூர் நுனி யாகச் செய்திடுக. ஆணியின்மீது மருந்து சொட்டும் குழலை வைத்து உ ங் க ளு ைட ய காற்றுத் திசைகாட்டியை ஒரு கட்டடத்தின் உச்சியின்மீதோ அல்லது ஒரு நீண்ட கழியின் மீதோ ஏற்றி வைத்திடுக. இப்படி அமைக்குங் கால் அஃது எல்லாத் திசைகளினின்றும் வரும் காற்றில் படுமாறு இருத்தல் வேண்டும். இந்தக் கழியில் தடித்த கம்பிப் புயங்களைப் பொருத்தி அவற்றின் முனைகளில் N, E, S, W என்ற குறியீடுகளை வளைத்து விடுக ; அல்லது உலோகத் தகட்டினின்றும் வெட்டிய பெரிய எழுத்துக்களைப் புயத்தின் முனைகளில் பற்ருசு வைத்துப் பொருத்தி விடுக. 3. காற்று வேகங் காட்டி : கிட்டத்தட்ட 50 செ. மீ. நீளமும் 1 செ. மீ. சதுரமும் உள்ள இரண்டு இலேசான மரச் சட்டங்களைத் தேர்ந்தெடுத்திடுக. ஒவ்வொரு துண்டின் சரியான மையத்திலும் 1 செ. மீ. அகலமும், சுமார் 0.5 செ. மீ. ஆழமும் உள்ள சிறு பிளவுகளை வெட்டுக. [. ஆஉ 队 | کہلات 负 அடுத்தபடியாக, இந்த இரண்டு சட்டங்களை யும் குறுக்குப் புயங்கள் அமையுமாறு அவற்றின் பிளவுகளில் ஒன்ருகச் சேர்த்துப் பொருத்துக. ஒரு மருந்து சொட்டும் சாதனத்தின் கண்ணுடிக் குழலை எடுத்து அதன் சிறிய முனையை ஒரு வாயு அல்லது சாராய விளக்குச் சுவாலேயில் சுழலச் செய்து அடைத்துவிடுக. குறுக்குப் புயங்களின் சரியான மையத்தில் மரத்தின் வழியாக சுமார் முக்கால் ப்குதி ஆழத் திற்கு ஒரு துளையினை இட்டு அத்துளையில் இந்த மருந்து சொட்டும் குழலைப் படியச் செய்து சீமைக் காரை அல்லது ஒருவகைச் சாந்தினைக்கொண்டு உறுதியாக இணைத்து விடுக. நான்கு சிறு சுருட்டுத் தகரக் கலங்கள் அல்லது பிளாஸ்டிக் தட்டுக்களைக் கைவசப் படுத்தி சிறு ஆணிகள் அல்லது மரையாணி களைக்கொண்டு அவற்றை நான்கு குறுக்குப் புயங்களின் முனைகளிலும் இணைத்திடுக. எல்லாக் கிண்ணங்களும் ஒரே திசையை நோக்கியுள்ளனவா என்பதை உறுதிசெய்து I 14