பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கொண்டே இருக்க, இரண்டிலும் பயன் படுத்தப்பெற்ற சோப்புக் கரைசல்களின் அளவுகள் எங்ங்னம் ஒப்பிடத் தகுந்தனவாக உள்ளன ? 2. வன்னிரை எங்ஙனம் உண்டாக்குவது? : வன்னீரில் இரண்டு வகை உள்ளன: ஒன்று மாறு வன்னீர் என்பது; மற்ருென்று நிலை வன் னிராகும். மாறு வன்னீர் அடியிற் குறிப்பிட் டுள்ளவாறு செய்யப்பெறுதல் கூடும் : சிறி தளவு தெளிந்த சுண்ணும்பு நீரினேக்கொண்டு தொடங்குக. (இயல் 18, இனம்-12இல் வழி களைக் காண்க.) கரியமிலவாயுவினைத் தெளி வான சுண்ணும்பு நீரின்வழியாக (இயல்-7 இனம் K-14ஐக் காண்க.) முதலில் உண்டான முகிற்படலம் மறைகின்றவரையில் குமிழியிடச் செய்க : இப்பொழுது நீங்கள் சிறிதளவு மாறு வன்னீரை அடைவீர்கள். நீருடன் சிறிதளவு கால்சியம் சல்ஃபேட் அல்லது பாரிஸ் காரை யினைச் சேர்த்தும் அதனைப் பல மணி நேரம் அப்படியே இருக்குமாறு விட்டுவைத்தும் நிலை வன்னீர் தயாரிக்கப்பெறுதல் கூடும். இது வடிகட்டப்பெற்ற பிறகு தெளிவான வடிகட் டின நீர்தான் நிலை வன்னிராகும். நீரில் மக்னீ சியம் சல்ஃபேட்டினைக் கரைத்தும் நீங்கள் இந்த வகை வன்னிரினத் தயாரிக்கலாம். 3. கொதிக்கவைத்தலால் வன்னிரை மென்மை யுடையதாக்குதல் : - கொதிக்க வைத்தலால் மாறு வன்மை நீரி னின்றும் அகற்றப்பெறுதல் கூடும். சிறித ளவு மாறு வன்னிருடன் ஒருசில சோப்புக் கரைசலின் சொட்டுக்களைச் சேர்த்து நன்ருகக் குலுக்கி நுரை உண்டாக்க முடிகின்றதா என்று பார்க்க. அடுத்து, அதே அளவு மாறு வன்மை கொண்ட நீரினைக் கொதிக்கவைத்திடுக. அதே அளவு சோப்புக் கரைசலைச் சேர்த்த பிறகு இந்த மாதிரி நீரைக்கொண்டு நுரையை உண்டாக்க முயலுக. 4. வே தி யி ய ல் பொருள்களைக் (Chemicals) கொண்டு நீரை மென் தன்மை யுடையதாக்கு தல்: ஒரு பாதி சோதனைக் குழலளவு வன்னீரை யும் ஒரு சில சொட்டுக்கள் சோப்புக் கரைசலை C. சன்னீரும் மென்வீரும் யும் கொண்டு துரையினே உண்டாக்க முயலுக. அடுத்து, இதே மாதிரி நீரினக் கொதிக்க வைத்து மீண்டும் அதே அளவு சோப்புக் கரை சலைப் பயன்படுத்தி நுரையினை உண்டாக்க முயலுக. ஒரளவு நிலை வன்னீரில் சிறிதளவு சலவைச் சோடாவினைச் (கா ல் சி ய ம் கார்பனேட்டு) சேர்த்திடுக. சோப்புக் கரைசலைக்கொண்டு துரையை உண்டாக்க முயலுக. நீர் மென்தன் மையை அடைந்து விட்டதா? இதே வன்னிரில் சிறிதளவு வெண்காரத்தை (Borax) அஃதா. வது சோடியம் பைரோபோரேட்டினைச் சேர்த்து அது மென் தன்மையை அடைந்து விட்டதா என்பதைப் பார்க்கச் சோதனை செய்திடுக. 5. தூய்மையாக்குவதில் நீருக்கு சோப்பு எங் கனம் துணைபுரிகின்றது? : அடுப்படிக் கொழுப்பு அல்லது களிம்பு நெய்யைத் துணிகளில் தடவி இரண்டு எண் ணெய்ப் பசைத் துணிகளைத் தயார் செய்க. ஒரு துணியைச் சோப்பின்றி வெதுவெதுப் பான நீரில் துவைத்திடுக. மற்ருெரு துணியை வெதுவெதுப்பான நீரில் அதிகமான சோப்பு நுரையைக்கொண்டு துவைத்திடுக. இரண்டு துணிகளையும் உலர்வதற்குத் தொங்கவிட்டு, துவைத்தலிளுல் எந்தத் துணி அதிகத் தூய்மையாக்கப்பெற்றது என்பதை உற்று நோக்குக. - 6. கொழுப்புடன் நீர் எங்கனம் செயற்படுகின் றது: - ஒரு நெட்டையான கண்ணுடிச் சாடியில் பாதியளவு வெதுவெதுப்பான நீரினை நிரப்புக. சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு எண்ணெயைச் சுமார் 1 செ.மீ. ஆழத்திற்கு அதில் சேர்த்திடுக. இக் கலவையைப் பலமாகக் குலுக்குக. இக்கொழுப்பு எங்ங்னம் துண்ணிய துளிகளாகவும் சிறு கோளங்களாகவும் பிரிந்து விடுகின்றது என்பதை உற்றுநோக்குக. இதனே அப்படியே விட்டு வைத்து இந்தச் சிறு கோளங்கள் யாவும் இறுதியாக ஒன்றுசேர்ந்து மேற்பரப்பின்மீது திரளுவதை உற்றுநோக் குக. அடுத்துவரும் சோதனையுடன் ஒப்பிடுவ தற்கு இதனை அப்படியே ஒரு புறமாக வைத் திடுக. -- - 131