பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டுவந்து இந்தச் சோதனையில் விடுக்கப் பெற்றுள்ள வினவிற்கு விடையிறுப்பதற்கு உற்றுநோக்கல்களை மேற்கொள்க. 9. காந்தத்தின் துருவங்கள் ஒரே மாதிரியாக உள்ளனவா ?: சோதனை-8இல் உள்ள அதே பொருள் களையே ஈண்டும் பயன்படுத்துக. தொங்க விடப்பெற்றுள்ள காந்தத்தின் ஒரு பக்கத்தில் ஒரு சுண்ணக் காம்பினுல் அல்லது தாளிளுல் அடையாளம் செய்திடுக. இப்பொழுது மற் ருெரு காந்தத்தின் ஒரு முனையைத் தொங்க விடப்பெற்றுள்ள காந்தத்தின் அடையாளம் செய்யப்பெற்றுள்ள முனேயருகே கொணர்க. உங்கள் கையிலுள்ள காந்தத்தை எதிரிடை யாகத் திருப்பி அதனுடைய மற்ருெரு முனை யைத் தொங்கவிடப்பெற்றுள்ள அடையாள மிடப்பெற்றிருக்கும் முனையருகே கொணர்க. அவை ஒரே மாதிரியாக எதிர்வினை புரிகின் றனவா ? முதல் தடவையிலுள்ள செயலை நீங்கள் எங்ங்ணம் விவரிப்பீர்கள் ? இரண்டா வது தடவையில் எவ்வாறு விளக்குவீர்கள் ? 10. காந்தத் தன்மையின் விதி: மீண்டும் சோதனை-8இல் உள்ள அதே பொருள்களையே பயன்படுத்துக. காந்தங்களை ஒரு காந்த ஊசியினைக்கொண்டு சோதித் திடுக. காந்த ஊசியின் வட முனையை வெறுத் தொதுக்கி அதன் தென்முனையைக் கவரும் ஒவ்வொரு காந்தத்தின் முனையினையும் அடை யாளமிடுக. காந்தங்களின் அடையாளமிடப் பெற்ற இம் முனைகள் வட துருவங்கள்' என்று வழங்கப்பெறுகின்றன. அ ைடயாள மி ட ப் பெருத முனைகள் தென் துருவங்கள் எனப் படுபவையாகும். காந்தங்களின் தென் துரு வங்கள் தெற்குத் திசையினைக் காட்டும் காந்த ஊசியின் முனையை வெறுத் தொதுக்க வேண் டும்; வடக்குத் திசையினைக் காட்டும் முனையைக் கவர வேண்டும். * இப்பொழுது அடையாளமிடப்பெற்றுள்ள காந்தங்களுள் ஒன்றனைத் திரும்பும் தொட்டி லில் தொங்கவிடுக. தொங்கவிடப்பெற்றுள்ள காந்தத்தின் வடமுனையின் அருகில் மற்ருெரு காந்தத்தின் வடமுனையைக் கொண்டு வருக. நீங்கள் காண்பது கவர்ச்சியா ? அல்லது காந்தத் தன்மை வெறுத் தொதுக்கமா ? அடுத்து, இரண்டு காந் தங்களின் தென் முனைகளுள் ஒன்றன் அருகே மற்ருென்றினைக் கொணர்க. நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? தொங்கவிடப்பெற்றுள்ள காந்தத்தின் தென் துருவத்தின் அருகில் உங் கள் கையிலுள்ள காந்தத்தின் வட முனையைக் கொணர்க. நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? தொங்கவிடப்பெற்றுள்ள காந்தத்தின் வட துருவத்தின் அருகில் உங்கள் கையிலுள்ள காந்தத்தின் தென் துருவத்தைக் கொணர்க. நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? ஓரினக் காந்தத் துருவங்களைப்பற்றியும், எதிரினக் காந்தத் துருவங்களைப்பற்றியும் நீங்கள் என்ன சொல்லக் கூடும்? இதுதான் காந்தத் தன்மையின் விதியாகும். 11. எளிய திசைகாட்டி ஊசிகளைச் செய்தல் : ஓர் எஃகுத் துண்டு, அல்லது கைக்கடிகார வில்லினை ஒரு காந்தக்கல் (Lode Stone) அல் லது வேருெரு காந்தத்தைக்கொண்டு வருடி, காந்தமாக்குக. அதனை ஒரு திசைகாட்டி ஊசியாக மாற்றுவதற்கு அஃது எவ்வளவுக்கு இயலுமோ அவ்வளவுக்கு -rb69ುಖT ஒரு தாங்கியினைப் பெறுதல் வேண்டும். இது பல்வேறு வழிகளில் ஏற்பாடு செய்யப்பெறுதல் கூடும். ஒரு சிறிது நீளமுள்ள (8 செ. மீ.) கண்ணுடிக் குழலின் ஒரு முனையை சுவாலை யில் வைத்துச் சூடாக்கி அடைத்துவிடுக. இங்ங்ணம் இயற்றப்பெற்ற சிறிய சோதனைக் குழலை ஒரு மரக்கட்டை அல்லது தக்கையின் வழியாகச் செலுத்தப்பெற்றுள்ள ஒரு குண்டுசியின்மீது தாங்கச் செய்திடுக. முத் திரை அரக்கினைக்கொண்டு எஃகுத் துண்டி னைச் சோதனைக் குழலுடன் பொருத்தி அது தடையற்றும் ஒரே சமனுகவும் ஊசலாடுமாறு சரிப்படுத்துக. திசைகாட்டி ஊசியைத் தாங்கச் செய்யும் மற்ருெரு வழி ஒரு பழைய துணி தைத்த பொத்தானிலிருந்து எடுக்கப்பெற்ற உலோ கப் பகுதியைப் பயன்படுத்துவதாகும். காந்த மாக்கப்பெற்ற கோலினை இரண்டு இரண்டு 213