பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுங்காகச் சுற்றுக. ஒவ்வொரு தடவையும் சில சுற்றுச்களைச் சுற்றினதும் சுற்றுக்களை நெருங்கியிருக்குமாறு தள்ளிக் கொள்க. இம் முறை சுற்றுக்கள் ஒழுங்காக அமைவதற்குத் துணை செய்கின்றது. ஆயினும், நீங்கள் ஒவ் வொரு முனையிலும் 10 அல்லது 12 செ. மீ, நீளக் கம்பியைச் சுற்ருது விட்டுவிட வேண்டும். இப்பொழுது கம்பிச் சுருளைக் கோலினின்றும் தழுவச் செய்து அது 75 செ. மீ. நீளமுள்ள கம்பிச் சுருளாகத் தங்கியிருக்குமாறு மெதுவாக இழுத்திடுக. இப்பொழுது கிட்டத்தட்ட 10 செ. மீ. அளவுள்ள தாமிரக் க்ம்பியை அமைப் புச் சுருளாகத் தொடங்கும் இடத்தின் அருகில் அமைப்பின் ஒவ்வொரு முனையிலும் இறுக்க மாக வைத்து முறுக்குக: இவை வழிகாட்டுக் கம்பிகளாகச் செயற்படுகின்றன. இந்த அமைப்பிற்கு உங்களுடைய ஏற்று சட்டத்தை தயாரிப்பதற்கு மரச் சாமான் களை விற்பவரிடமிருந்து ஒரு 30 செ. மீ. சதுர முள்ள ஒரு கல்நார்ப் (Ashesto) பலகையைப் பெறுக. 15x20 செ. மீ. அளவில் அடித்தளத் திற்காக ஒரு துண்டையும் 25x15 செ. மீ. அளவில் பக்கங்களுக்காக நான்கு துண்டுகளை யும் அதினின்றும் வெட்டுக. படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு இவற்றை ஒன்ருகச் சேர்த்து வைத்திடுக. துளைகளிட்டு சிறு திருகாணி களைப் பயன்படுத்தி அவை ஒன்று சேர்க் கப்பெறலாம். கல்நார் உலே சிமைக் காரை இதற்கு மிகவும் சிறந்தது. இரும்புக் கடை அல்லது மரக்கடையினின்றும் அதனைப் பெற லாம். இப்பொழுது அடித்தளத்தைப் பொருத்து துவதற்கு ஒரு பலகைத் துண்டினே வெட்டுக; காற்றிடத்தைத் தருவதற்கு இரண்டு குறுக லான கல்நார் அட்டைத் துண்டுகளைக் கொண்டு பலகையுடன் ஒரு சட்டத்தை இனத்திடுக. இப்பொழுது நீங்கள் உங்கள் அமைப்பினை நிறுவுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றீர்கள். முன்பக்க முனையில் சம இடைவெளிவிட்டு நான்கு துளைகளையும் அதன் எதிர்ப்புக்க முனை யில் சம இடைவெளியுடன் மூன்று துளைகளே யும் இடுக. கிட்டத்தட்ட 2.5 செ.மீ.நீளமுள்ள சிறு திருகாணிகளை அரைகுறையாகத் திருகுக. சட்டத்திற்கு முன்பக்கத்தில் தாமிர வழிகாட்டிக் கம்பிகட்காக இரண்டு துளைகளை இடுக. அடித் D. மின்ற்ைறலினின்று வெப்பமும் ஒளியும் தள த்தின் முன்பக்கமுள்ள மூலைகளிலும் மின் கோடிகட்காக இரண்டு திருகாணிகளை அமைத் திடுக. இப்பொழுது உங்களுடைய கம்பி யமைப்பினைத் திருகாணிகளின்மீது பின்னும் முன்னுமாக வளைத்துச் சுருக்கிடுக. ஒவ்வொரு பகுதியிலும் சம அளவு அமைப்பு இருக்குமாறு இப்பகுதியைத் திட்டமிடுக. ஒவ்வொரு பகுதி யையும் அதன் திருகாணி தாங்கியின் ஒரு மரையில் பொருத்துக : இப்படிப் பொருத்தும் பொழுது அவை அடித்தளத்திற்கு மேல் கிட் டத்தட்ட 5 மி. மீ. உயரத்தில் தாங்கப்பட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்க. தாமிர வழி காட்டி கம்பிகட்கெனவே தயாரிக்கப்பெற்ற துளைகளின் வழியாக அவற்றைக் கொணர்ந்து மின் கோடிகளைச் சுற்றி அவற்றினை முறுக்கி விடுக. அப்பம் அல்லது ரொட்டியைப் பிடித் தற்குரிய தோசைக் கல்ல்ேத் தவிர உங்களுடைய தோசைக்கல் அமைப்பு முற்றுப்பெறுகின்றது. 1 செ. மீ. வலைக்கண் உள்ள ஒரு சதுரமான கம்பி வலையை இதற்காக வெட்டுக; அல்லது அடுப்பறையிலிருந்து ஒரு சிறு தோசைக் நிக்கன்-குரோம் கம்பி கல்தார் அட்டிை - தாமிரக் கம்பி கல்லைப் பயன்படுத்துக. தோசைக்கல் கம்பி யமைப்பினையோ அல்லது மின் கோடிகளையோ 259