பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுவீர்களாயின் சிறுவர்கள் அதில் கவர்ச்சி யுடையவர்களாகவும் கிளர்ச்சியுடையவர்களாக வும் ஆதல் மிகவும் எளிது. 6. உங்கள் பள்ளியருகிலுள்ள உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியரைக் கண்டு பேசி அவ ருடைய துணையையும் ஒத்துழைப்பையும் பெறுங் கள். உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் கள் உங்கட்குப் பயிற்றும் கருத்துக்களே நல்கு வர்; சோதனைகளில் கருத்தேற்றங்களைத் தரு வர்; பொருள்களையும் புத்தகங்களையும் ஈந்து துணை செய்வர்; அறிவியல் அவர்களது துறை யாதலின் அவர்களிடம் துணைபுரியக்கூடிய கருத்துக்கள் நிறைந்து இருக்கும். பழக்கப்படாத பொருளே உங்களைக் கோழை யாக்குதல் கூடும் என்பதை நினைவிற் கொண்டு, இயன்றவரை அறிவியற் பொருளுடன் நேரடி யான அனுபவத்தைப் பெறுங்கள். மேற்கூறப் பெற்ற கருத்தேற்றங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றினுல் புதிய அறிவியல் தலைப்பையும் கையாளுவதற்கேற்ற நம்பிக்கை உங்களிடம் ஏற் படும் என்பது உறுதி. 7. உங்களிடம் பொருளில்லாமையை ஒரு பெருந்தடையாகக் கருதாதீர்கள். உங்கட்கு உண்மையில் தேவையாகவுள்ள கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சிறுவர்களே தங்களது இல் லங்களினின்றும் கொணர்வர். அவர்களால் தர முடியாதவற்றை நீங்கள் இரும்புக்கடையினின் றும் பெறலாம்; உயர்நிலைப் பள்ளியினின்றும் இரவல் கேட்டு வாங்கலாம் ; அவற்றைப் பள்ளித் தோட்டத்தில் காணலாம்; பள்ளிக் காவற்கார னிடமிருந்தும் பெறலாம் : அல்லது மாளுக்கர் களைக்கொண்டே செய்விக்கலாம். தொடக்க நிலை அறிவியல் வகுப்புக்களில் விலையுயர்ந்த சிக்கலான துணைக்கருவி பயன் படாமையுடன் கேட்டினையும் பயக்கும். அது குழப்ப நிலையை உண்டாக்குவதுடன் மேற்கொண்டுள்ள பிரச் சினையை விட்டு விட்டுத் தன்பாலேயே சிறுவர் களின் கவனத்தை ஈர்க்கவும் கூடும். 8. மாளுக்கர்களே சோதனையை மேற் கொள்ளட்டும். இங்ங்னம் கற்றுக்கொள்ளவே சிறுவர்கள் விரும்புகின்றனர். பொருள்களைத் திரட்டவும் கருவிகளை ஆயத்தம் உங்கள் வகுப்பிலுள்ள சில திறமை மிக்க மாளுக்கர்களைப் பயன் படுத்திக் கொள் ளுங்கள். Ig செய்யவும் 8. அறிவியல் ஆசிரியர் 9. உங்கடகு எளிமையாகப் பழக்கப்பட்டுள்ள தலைப்பினைப் (topic) பயிற்றலால் உங்கள் அறி வியலைத் தொடங்குங்கள். கற்கவேண்டிய பிரச் சினைகள் அனைத்தினையும் மாணுக்கர்களே தொடங்கி வைக்க வேண்டும் என்ற கொள் கைக்கு இஃது எதிர்மாருனதாக இருக்கலாம். அந்தக் கொள்கை எப்படியும் வாதத்திற் குரியதே. நீங்கள் கல்லூரியில் அடைந்த சிறி தளவு அறிவியல் பயிற்சி, சொந்த விருப்பச் செயல் (hobby) அல்லது சொந்தக் கவர்ச்சி உங்கட்குச் சில தனிப்பட்ட துறையில் அடிப் படையை நல்கியிருக்குமாயின், அந்த அறிவு அல்லது கவர்ச்சி உங்கள் விருப்பத் தலைப் பினைத் தீர்மானிக்கப் பயன்பட்டு அதுவே உங் கள் அறிவியல் பயிற்றலுக்கு மூலதளமாகவும் அமையலாம். பின்னர், சிறுவர்களின் முதற் குறிப்புக்களைப் பின்பற்றிச் செல்வது மிகவும் எளி தாக இருக்கும். ஆசிரியர் என்ற நிலையில் முதற் கருத்து உங்களிடமிருந்து தோன்றிலுைம், அவர்கள் எப்பொழுதும் திட்டமிடுதலில் இறங்கு தல் கூடும். 10. உங்கள் அ றி வி ய ல் பா ட ப் புத்தகங் களைத் தொடர்ந்து வெளிவரும் கையேடுகளை (manuals) நன்கு பயன்படுத்துங்கள். அவற்றில் சோதிக்கப் பெற்று, நல்லன என்று கண்ட பயிற் றுதல்பற்றிய கருத்துக்கள் நிறைய உள்ளன. நீங்கள் பாடப் புத்தகத்தைப் பின்பற்றவிடினும் அவையே மிகவும் பயனுள்ளனவாக இருக் கும். 11. உங்களுடைய அறிவியல் பொருள், பயிற் றலைப்பற்றிய உங்கள் குறிப்புக்கள், உங்கள் திட்டங்கள் முதலியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அவற்றை வருங்காலத்தில் நீங்களே பயன்படுத்தலாம்; அல்லது பிற ஆசிரியர்கள் உங்களிடமிருந்து அவற்றை இரவ லாகவும் பெறலாம். நீங்கள் ஏற்கெனவே பயன் படுத்திய பொருளைக் காணும் வாய்ப்பு உங்கட்கு இருந்தால், ஒரு தலைப்பு இரண்டாவது தடவை மிகவும் எளிதாக அமையும்,

12. எந்தப் பொருள்களைக் கொண்டு ஏனைய ஆசிரியர்கள் வெற்றி யடைந்தனர் என்பதுபற்றி அவர்களைக் கண்டு பேசி உங்கள் பட்டறிவை அவர்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள். அத் தகைய பரிமாற்றம் எப்பொழுதுமே பெருந் துணையாக அமையும்,

9