பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகச் சிக்கலான இயல்புடைய சோதனைகளையும் செய்ய நேர்ந்தால் அவை ஆசிரியராலேயே செய்யப்பெறுதல் வேண்டும். 5. சிறுவர்கள் தம்முடைய வினுக்களுக்கு விடைகாணும் முறையில் சோதனைகளைத் தாமா கவே தொடங்கலாம். எந்த நோக்கத்தில் பார்த்தாலும் இவை மிகவும் மனநிறைவு தரக் கூடியவை. சில ஆசிரியர்களின் கோட்பாட்டிற்கு நேர் மாருக, சோதனைகள் எப்பொழுதும் சிக்க லானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ; அவை முன்னதாக ஓர் அறிவியல் பாடப் புத்தகத்தில் விவரிக்கப்பெற வேண்டி யதுமில்லை. சில சமயம் அவை விவரிக்கப் பெறுகின்றன ; சிலசமயம் அங்ங்ணம் செய்யப் பெறுவதில்லை. 6. புத்தகங்களிலுள்ள சோதனைகளாயினும், வகுப்பினுலேயே தொடங்கப்பெறும் சோதனை களாயினும் வழிகாட்டும் குறிப்புக்களை யொட்டி அவை மிகக் கவனமாகச் செய்யப்பெறுதல் வேண்டும். 7. தம்முடைய முடிவுகள் மிகவும் நம்பத்தக் கனவாக இருக்க வேண்டுமாயின் தாம் ஒரு சோதனையைச் செய்யும்பொழுது என்ன நடை பெறுகின்றது என்பதை மாணுக்கர்கள் மிகவும் ஊன்றிக் கவனித்தல் வேண்டும். எடுத்துக்காட் டாக: இலைகள் நீரினை வெளியிடுகின்றனவா, இல்லையா என்பதை அவர்கள் கண்டறிய முயல்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒரு தாவரத்தைக் கண்ணுடிச் சாடியால் மூடி, சாடியிலுள்ள காற்று மண்ணுடன் தொடர்பு கொள்ளாதிருக்குமாறு சோதனையை அமைக் கின்றனர். அடுத்த நாள் காலையில் சாடியின் உட்புறமேற்பரப்பில் நீர்த்துளிகள் காணப் பெறுகின்றன. சிறுவர்கள் உடனே தம்முடைய புதிருக்கு விடையைக் கண்டறிந்து விட்டதாக முடிவு கட்டுகின்றனர். ஆனல், அவர்கள் அந் நீர்த்துளிகள் சாடியிலுள்ள காற்றினின்றும் வர வில்லை என்பதை எவ்வாறு உறுதி செய்தல் கூடும்? அவர்களால் உறுதி செய்ய முடியாது தான். ஆல்ை, அவர்கள் முதலாவதைப் போலவே இன்னொரு துணைக்கருவியமைப் பினைப் பொருத்துகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்; இதில் தாவரச் சட்டி, ஒரு கண் ணுடிச் சாடி, மண் முதலியவை இருக்குமேயன்றி தாவரம் இராது. இரண்டு சாடிகளும் ஒன்றன் அருகில் மற்ருென்றிருக்குமாறு வைக்கப்பெற்று C. சிறுவர்கள் அறிவியல் கற்கும் முன் ம் உற்று நோக்கப்பெறுகின்றன. இந்தத் தடவை தாவரம் உள்ள சாடியின் உட்புற மேற்பரப்பில் மட்டிலும் நீர் காணப்பெற்று மற்ருெரு சாடியின் அப்பரப்பில் நீர் காணப்பெருவிட்டால், அந்நீர் தாவரத்தின் இலைகளினின்றே வந்திருத்தல் வேண்டும். சோதனைகள் தம்முடைய முழுப் பொருளையும் செயல்கள் மூலம் தரவேண்டுமா யின் இத்தகைய கட்டுப் படுத்தப்பெற்றுள்ள Glaruso (3g5ira si3ssr (pso p (experimentation) மிகவும் இன்றியமையாதது. இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் முடிவுகள் செய்வதற்கு முன்னர் சோதனையை ஒரு தடவைக்குமேல் செய்தல் இன்றியமையாதது. (9-வது இனத்தையும் காண்க.) 8. முதல்நிலைப் பள்ளிச் சோதனைகளில் மிகச் சிக்கலான பொருளைவிட எளிய துணைக்கருவி யைப் பயன்படுத்துவதே மிகவும் பொருத்த மானது. முன்னரே குறிப்பிட்டுள்ளவாறு உயர் நிலைப் பள்ளி ஆய்வகங்களினின்றும் இரவலாகப் பெறும் மிகச்சிக்கலான துணைக்கருவி எப் பொழுதும் சோதனையின் உண்மையான நோக் கத்தையே குறைத்துவிடும் : கவனத்தையும் சிதறச் செய்துவிடும். 9. ஒரு சோதனையினின்றும் முடிவுகளைச் செய்வதில் மாணுக்கர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஒரு தடவை சோதனை செய்ததைக் கொண்டே அவர்கள் எதனையும் மெய்ப்பிக்க முடியாது. மேலும் மிகுதியாகச் செய்த சோதனைகள் மூலமோ, அல்லது நம்பக மான புத்தகங்களினின் ருே அதிகமான சான்று களைப் பெறும்வரை தம்முடைய தீர்ப்புக்களை (findings) தற்காலிகமானவையாகவே கொள் ளல் வேண்டும், முடிவுகளைச் சரியாகவும் முழுமையாகவும் உரைக்கவேண்டும். 10. ஒரு சோதனை யி லி ரு ந் து அன்ருட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் பிரச்சினைகளிலும் எத்தனைத் தொடர்புகள் காணமுடியுமோ அத்தனைத் தொடர்புகளே அமைத்துக் காணல் வேண்டும். இது கடினமான ஒரு படியே : ஆளுல், அறிவியல் பயில்வதற்குரிய முக்கியமான காரணங்களுள் இஃது ஒன்று. ஒரு சோதனை செய்யப்பெற்ருல் அதன் பயனைப்பற்றிய முதற் படியே எடுத்துக்கொள்ளப் பெறுகின்றது. எடுத் துக்காட்டாக, மாளுக்கர்கள் இரும்பு துருப்பிடித் தலைப்பற்றிய சோதனையைச் செய்து முடித்த பிறகு பொருள்கள் துருப்பிடிக்காமலிருக்க

11

11