பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வெப்ப மண்டல நிலைகள்: வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாகக் குளிர் காலத்தில் ஆய்வகத்தில் சங்கடம் ஏற்படு வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பொருள் கள் அழிகின்றன; தாள்கள் ஒன்ருே டொன்று ஒட்டிக்கொள்ளுகின்றன; கருவிகளில் துரு ஏறுகின்றது; மாதிரிப் பொருள்களின் மீது பூஞ்சக்காளான் படியத் தொடங்குகின்றது; கண்ணுடி வில்லைகளின்மீது காளான் வளர்கின் றது; இஃது அவற்றைப் பயனற்றவைகளாகச் செய்து திருத்தமாகத் தேய்க்கப்பெற்றுள்ள அவற்றின் மேற்பரப்புக்களைச் சிதைத்து விடு கின்றது. இவற்றுடன் வேறு நாச வேலைகளும் நடைபெறுகின்றன. எறும்புகள், கரையான்கள் (Termites), வேறு பூச்சிகள் தம்முடைய முடி வில்லாத அழிவு வேலையைத் தொடர்ந்து செய் கின்றன. காற்றுப் புகா கொள்கலனில் எது வைக்கப் பெறுதல் கூடுமோ அஃது அங்ங்னமே வைக்கப் பெறுதல் வேண்டும். கொழுப்புப் பசை நன்கு தடவப்பெற்ற மூடிகளைக் கொண்ட மாதிரி சாடிகள் போன்ற கண்ணுடி சாடிகள் இதற்கு மிகவும் சிறந்தவை. இனிப்புப் பொருள்கள் வைக்கப்பெற்றிருந்த மரையுள்ள மூடியைக் கொண்ட புட்டிகள் மிகவும் பயன்படத்தக்கவை. ரொட்டிக் கலங்கள், பணியாரக் கலங்கள் போன் றவை உலோகக் கொள்கலங்களை, மூடிக்கும் கொள்கலனுக்கும் இடையிலுள்ள பொருத்து வாயில் காப்பிடு நாடாவை இணைத்து ஓரளவு காற்றுப் புகாதவாறு அமைத்திடலாம். பயன் இல்லாதபொழுது நுண்பெருக்கிகளின் வில்லைகள் உலர்த்தும் பாண்டத்தில் வைக்கப் பெறுதல் வேண்டும். கரு நெய்க்காரத்தில் (Creosote) நனைக்கப்பெற்ற கயிற்று வில்லையின் கொள்கலனுடன் வைக்கப்பெற்ருல் அது பூஞ்சக்காளான் வளர்வதைத் தடை செய்வ தாகக் கண்டறியப்பெற்றுள்ளது. மழைக் காலத்தில் நுண்பெருக்கிகள், மின் ளுேட்டமானிகள், ஏனைய கூருணர் கருவிகள் ஆகியவை இயன்ருல் எப்பொழுதுமே எரிந்து கொண்டிருக்கும் 50-வாட் மின்குமிழைக் கொண்ட ஒரு காற்றுப் புகா நிலையறைப் பெட்டியில் (Cupboard) சேகரஞ் செய்யப் பெறுதல் வேண்டும். சிறிதளவு களிம்பு நெய் (Waseline) த ட வ ப் ெப ற் று ள் ள ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் பொருளில் ஊசிகள் செருகப்பெறுதல் கூடும். திருகுமானிகள், வெர்னியர் காலிப்பர் கள், இசைக் கவைகள் போன்ற உலோகத் தாலான கருவிகளின்மீது கொழுப்பெண்ணெய் தடவப்பெறுதல் (Greased) வேண்டும். வாலே தாங்கியிலுள்ள அடித்தள த்தின் மரையாணி கள், வாலை வளையங்கள், வாலேயின் இறுக்கிகள் ஆகியவற்றில் அடிக்கடி எண்ணெய் தடவப் பெறுதல் வேண்டும். மருத்துவர் அறுவைக் கத்திகள் களிம்பு நெய் தடவப்பெற்று ஒரு பெட்டியில் வைக்கப்பெறுதல் வேண்டும். கைக் கருவிகளின் உலோகப் பகுதிகள் எண்ணெய் தோய்ந்த கந்தைத் துணியால் தேய்க்கப்பெறு தல் வேண்டும். பசை, பிசின், கோந்து ஆகியவை பூச்சிகளை விலக்கித் தள்ளுவதற்கு ஏதாவது ஒரு வேதி யியற் பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும். வெப்பமண்டலப் பகுதிகளுக்கென அத்தகைய ஒட்டு பொருள்கள் பிரத்தியேகமாகத் தயாரிக் கப்பெற்று விற்கப்படுகின்றன. ஆளுல், ஆசிரி யரே தன்னுடைய பசையைத் தயாரிக்கும் பொழுது சிறிதளவு மெர்க்கியூரிக் குளோரைடு (வீரம்) கரைசலைச் பேர்த்துக் கொண்டால் நல்ல LItu#ơr# #(#th. (Calcium Chloride Institute, 909 Ring Building, Washington, D.C., U.S.A.)-என்ற ஆராய்ச்சிக் கழகம் வெளி u?' l- It's Easy to Reduce Humidity srsirp சிறு புத்தகத்தையும் கலந்தாராய்க.) 9. பண்ணை வளர்ப்புக் கரைசல் (தாவரங்கட்கு) : அடியில் குறிப்பிடப்பெற்றுள்ள மிகத் தூய்மையான உப்புக்கள் ஒருசேர ஒரு லிட்ட வாலே வடிநீரில் கரைக்கப்பெறுதல் வேண்டும் 0.70 கிராம் பொட்டாசிய நைட்ரேட்டு 0.25 கிராம் கால்சிய சல்ஃபேட் (நீருட்டியது) 0.25 கிராம் கால்சிய ஃபேட்டு (நீருட்டியது) 0.25 கிராம் மக்னிசயம் சல்ஃபேட்டு (நீருட் டியது) - 008 கிராம் சோடிய குளோரைடு 0.005 கிராம் ஃபெர்ரிக் குளோரைடு (நீருட் டியது). அதன் பிறகு இந்தக் கரைசலுடன் அடியிற் கண்டவை சேர்க்கப்பெறுதல் வேண்டும் : - ஹைட்ரஜன் பாஸ் 301