பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும் செந்தில் நாயகத்தால் இந்த அபிப்பிராயங்களைக். கேட்க முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் பிரதி பிம்பமே அந்தப் படம் என்று அவன் கருதுகிற விஷயத்தை நண்பர்களிடம் சொல்லவும் துணி வில்லை, தனது உள்ளத்தில் கிடந்து உறுத்தும் நமைச்சலையும் வெளியிடத் திராணியில்லை. அன்று முதல் அவன் அந்தப் படத்தையும் தன்னையும் ஒழுங்காகக் கவனித்தான், படம் நாளுக்கு நாள் கருத்துக்கொண்டு வந்தது. 'எனக்கு, குஷ்டம் வருவதைத் தடுக்க முடியாதா? அப்படி வந்தால்........? அவன் யோசித்தான், 'வீட்டிலிருந்து கடிதத்துக்கு மேல் கடிதம் வருகிறது. சாந்தி முகூர்த்தமாம்! ஏன்? அந்த அபலை கோமதிக்கும் இந்த விஷயத்தில் பங்கு. கொடுக்கவா? என் தந்தையின் வழியாக எனக்கு வந்து: கொண்டிருக்கும் இந்தத் தொழுநோய் பரம்பரை பரம் பரையாய் நிலைத்து வாழ்வா? நான் குஷ்டரோகியாய், அழுகி வழியும் தொழும்புப் புண்களுடன் சீழுடன் விரலற்ற மொட்டைக் கரங்களுடன் உலகிலே திரிய வேண் டுமா? என் நண்பர்கள், உறவினர்கள் என்ன நினைப்பார் கள்? எல்லோரும் காறியு மிடி, கதியற்று, ஆதரவற்று, யாவரும், அருவருக்கும் புழுத்துச் செல்லரித்துப்போன ஒரு ஜென்மமாய் நாட்டில் உலவவா?' அவனால் அந்தச் சிந்தனையின் வலிமையைத் தாங்க முடியவில்லை. படம் கறுத்துக்கொண்டே இருந்தது! அதே வேளை தாத்தாவிடமிருந்தும் உடனே புறப் 4.கட்டு வரும் படி தந்தி வந்தது! அவனோ அறையை விட்டு வெளிச் செல்வதில்லை. உடம்பைத் திறந்தவாறே வைத்திருப்பதில்லை. யார்