பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானோதயம் 147 ஆனால், இங்கு மூல பிதாவே லிங்க உருவாப் நின்றார்! அவன் தலை கிறுகிறுத்தது! மறுகணம் அவன் சுால் கள் அங்கு தரிக்கவில்லை, தேடியே வந்தால், கோயிலை விட்டு, மூவஸ் தாக்கத்தைவிட்டு, முருகக் கடவுளைவிட்டு, விநாயகப்பெருமானைவிட்டு ஓடியே 45வந்துவிட்டான் , அப்போது சுப்ரடாமலணி ஓசை அவனை அழைக்கவில்லை. அவன் வீட்டுக்கு வந்தான். கதவு திறந்தே கிட..ந்தது. அவன் மனம் கட்டுத்தறி இழந்த காளைGS:யப் போலத் தாள் இன்னும் துள்ளியது, அதை அடக்க அவனால் முடியவில்லை. 'நெருப்புத்தான் நெருப்பை அணைக்கும் தனிமையில் வேகும் தன் உடல் நெருப்பை, வான மண்டலத்தின் சுடு நிலா வா வது அணைக்கட்டும்' என்று நிலா முற்றத்துக்குச் சென்றான், அங்கு அவன் கண்ட காட்சி-- நிலா முற்றத்தில் மாதவிப் பந்தலின் நிழலிலே துசி 8லாய், அவள் படுத்திருந்தாள், குங்குமம் தீட்டிய மார்புச் குவடு, சக்கரவாகப் பட்சிபோலத் தெரிந்தது . அகவிழ்ந்த "தொங்கும் கருமேகக் கூந்தல் நிலவொளியில் அருவிபோல மின்னிற்று . ககண் மலர்கள் குவிந்திருந்தன; இதழ்கள் குவிந்திருந்தன. அதில் குறுஞ்சிரிப்பு, ஆனந்தக் கனவோ? அல்லது கடந்த கால அனுபவத்தின் நினைவில் வெடித்த தகையோ?