பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி 121 பார்த்துக் கொண்டதாகச் சலித்துக் கொண்டாரே, அவ சில்லாமல் நான் யார்? பின் அவர் ஏன் அப்படிப் பேச வேண்டும்?... 'கணவனும் மனைவிக்கு அடிமையல்ல; மனைவியும் கண வனுக்கு அடிமை யல்ல. ஆனால், சுதந்திரம் என்று சொல்லி இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் பிரிந்து தான்தோன்றியாகச் சென்றுகொண்டிருப்பதுதான் சுதந் திரமா? நான் பெண், எனக்கு அவர் துணை, அலரின்றி நான் இயங்க முடியாது. அப்படியிருக்கும்போது அவர் என்னைச் சுதந்திரமாய் விட்டுவிட்டேன் என்று சொல்லி என்னை விட்டு விலகிக் சென்றால்.... “ அன்று துணிக்கடையில் துணி எடுக்கவே மனம் இல்லை. அவருக்காகத்தானே நான் இருக்கிறேன், என்ற வது என்னை' 'அதைக் கட்டு, இதைக் கட்டு' என்று வற்புறுத்தி யிருக்கிறாரா? எல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்! நல்ல சுதந்திரம்! அபிப்பிராயம் கூறுவதால் கூடவா சுதந்திரம் கெட்டுவிடப் போகிறது! “ நான் அவருக்கு அடிமையாக வேண்டாம். ஆனால், அவரது அன்புக்கு நான் அடிமையாகத்தான் வேண்டும். என்னை நான் அவருக்கு அடிமைப் படுத்த எண்ணும் போதெல்லாம் அவர் ஏன் விலகி ஓடுகிறார்? ...

  • அடிமையாவதில் ஒரு இன்பமா?... இன்பம் இருப்ப

தாகத்தான் எனக்குத் தெரிகிறது. பக்தர்கள் அடியார்க்கு அடி.யாராக இருப்பதால் தானே கடவுளுக்குப் பாத்திரமா கிறர்கள். இல்லறத்தில் ஒருவருக்கொருவர் அடிமையானால் தானே ஆனந்தம் பிறக்கும். அந்த அடிமை ஆதிக்கத் தினால் வரக்கூடாது; அன்பினால் வரவேண்டுமா? அன்புக்கு அடிமையா?..அப்படியென்றால் அவருக்காக நானும் எனக் காக அவரும் வாழ்வது தான் சுதந்திரமா?...

  • இப்போது அப்படியா வாழ்கிறோம்? நான் நானாக

வாழ முடிய வில்லையே! அவராவது அவராக வாழ்கிறாரா?” ர. க.-8