பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயை , 135 திருநெல்வேலியில் தங்கியிருந்த அன்று, அவனுக்கு தாமிரபருணி காற்றில் குளிக்கவேண்டும் என்று சபலம் தட்டியது. வழக்கம் போல், காலையில் எழுந்து விடிவதற்கு முன் ஆற்றங் கரைக்குச் செல்ல முனைந்தான், கற்பகமும் உடன் கிளம்பினாள். இருவரும் பேராச்சியம்மன் துறைக்கு குமரியிருட்டில் 15ந்து சேர்ந்தார்கள் , சீக்கிரமே குளித்து விட்டால், காப்பி பலகாரம் ஆனதும் ரயில் ஏற வசதியாயிருக்கும் என்ற நினைப்பு. இருவரும் தாமிரபருணி நீரில் குளித்தார்கள், தேக திலை காரணமாக, செல்லப்பா, விரைவில் கரையேறி விட் டான். கற்பகமோ அப்பா! இந்த நீரில் கும்மாளம் போட்டு எத்தனை நாளாகிறது? நீங்கள் கரையிலேயே இருங்கள். நான் கூடக் கொஞ்சநேரம் குளிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே நீந்தினள், கரொலைப் போலத் துள்ளிப் பாய்ந்தாள், அவன் கரையிலிருந்தவாறே அவள் குளிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். கலுக் கலுக்கென்ற மெட்டியோசை கேட்டுத் திரும் பினான். யாரோ வந்து கொண்டிருந்தார்கள். இடுப்பில் ஒரு குடம்; தோளில் துவைப்பதற்காக ஒரு சேலை. அவன் கூர்ந்து பார்த்தான்; அதற்குள் அவளே நெருங்கி வந்து விட்டாள். “அத்தான்! மங்கிய நிலவொளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அவள் கழுத்தில் தங்கத் தாலி மின்னியது. யாரது? கற்பகமா? அவனுக்குத் திடுக்கிட்டது; உடம்பு புல்லரித்தது . இருவரும் ஏதேதோ பேசினார்கள்.