பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள வந்தான் க ள்ள மார்க்கெட் ஒழிக! பதுக்கல்காரனைச் சிறையிலடை! என்றெல்லாம் தொண்டை கிழியக் கோஷமிட்டுக் கொண்டு {சென்றது, ஒரு ஊர்வலம். அன்று ஆகஸ்ட் இருபத்து மூன்றாம் தேதி, சுதந்திரம் வந்து பத்து தினங்கள் கூட ஆக வில்லை. அதற்குள் நெல்லை ஜில்லாவில் பட்டினிப் பட்டாளம் திரண்டுவிட்டது. ஊரிலே பல ரேஷன் கடைகள் திறக்கப்பட்ட வில்லை; ரேஷன் கடைக்காரர்கள் கடையைத் திறந்து வைத்துக்கொண்டு, ஈ விரட்டத் தயாராயல்லை, வயிற்றுக்கு உத்தரவாதம் அளித்த ரேஷன் கார்டுகள் வலியிழந்து விட்டன. பஞ்சம் பல்லிளித்தது! ‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையாற்றங்கரையிலே' '..பக்த சம்! .,..., கள்ள மார்க்கெட் ஒழிக! பதுக்கல்காரனைச் சிறையிலல..! அனவரத விநாயகம் பிள்ளையின் வீட்டுப் பக்கம்: எந்ததும் அந்தப் பட்டினிப் பட்டாளத்தின் குரல் உச்ச ஸ் தாயியை அடைந்தது. உரக்கக் கோஷப்பிட்டுவிட்டு, அவர் வீட்டு நடையில் காறி உமிழ்ந்து விட்டுச் சென்றார்கள், 4.க்க ள். உள்வீட்டு முற்றத்திலே , ஈஸிசேரில் சாய்ந்துகொண்டு பக்பக்கென்று மணிலாச் சுருட்டை இழுத்துக் கொண்டிருந்த பிள்ளையவர்களின் காதிலும், அந்தக் கோஷங்கள் விழுந்தன . சுருட்டைக் கவ்வியிருந்த உதட்டுக் கோணத்தில் ஒரு விகார மான புன்னகை விரிந்து வதங்கியது.