பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள வந்தான் 1 39 தில் பழித்த 'வங்காளஞ் சாக்கை'-கதரை, உடுத்த ஆரம் யித்ததோடு, தமது வீட்டிலும் வில் வண்டியிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தூய 'கதராடை அவருடைய நடவடிக்கைகளுக்குச் சரியான திரையாகப் பயன்பட்டது. சர்க்கார் அதிகாரிகளிடம் ஒரு மணி தானியங்கூட இல்லை என்று கைவிரித்தவர்களில் அவரும் ஒருவர். எனினும், ஊரில் மட்டும் அவர் வீட்டுக்குள் நிலவறை ஒன்று கட்டி,

  • மூட்டை மூட்டைகளாக அடுக்கி வைத்திருக்கிறார் என்பது

எல்லோரும் பரிமாறிக்கொள்ளும் பகிரங்க ரகசியம், ராசையா அவருடைய செல்லப் பேரன். ஆண் வாரிசு .அற்றவராதலால், அவருடைய மகள் கோமதியின் பிள்ளை யான ராசையா தான் அவருடைய சொத்தை ஆளப் பிறந்தவனாக இருந்தான். தாயும் தந்தையும் அரிய நாயக புரத்திலே இருந்தாலும், ராசையா தாத்தா வீட்டிலே தான் வளர்ந்து வந்தான். அன்வர தீ விநாயகம் பிள்ளைக்குப் பேரன்மேல் அபார வாஞ்சை; உயிர், ராசை AL.INாவும் தாத்தாவிடம் அத்தனை பிரியத்தோடு நடந்:N கொள்வான். பிள்ளையவர்கள் அவனைத்தான் எதிர்நோக்கி யிருத் தார், ஆனால் மழை ராசையாவுக்கும் முந்தி விட்டது. தோல் கிழிந்த கமலையைப்போல், மழை கொட்ட ஆரம் பித்தது. பிள்ளையவர்கள் நிலைகொள்ளாமல் தவித்தார்.

  • பேரப்பிள்ளை எங்கே அகப்பட்டுக் கொண்டானோ என்ற

பயம் ஒரு புறம்; புழக்கடையில் உள்ள நிலவறையில் எங்கே தண்ணீர் பொத்துக்கொண்டு இறங்கிவிடுமோ என்ற பதைப்பு ஒரு புறம். - எழுத்திருந்து கீழும் மேலும் நடந்தார். மழை தணிந்து, தூற்றலாக மாறும் வேளை ராசையா -பைக்கூட்டைத் தலைமேல் வைத்துக் கொண்டு, உடம்பெல் --லாம் நீர் சொட்டச் சொட்டப் படியேறி வந்தான். மழையிலே நனைந்து வந்தாலும் பயல் வீடு வந்துவிட்டான் என்ற திருப்தியோடு, அவனைப் பார்த்து, ஏண்டா