பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள வந்தாள் ஆனால் ராசையா படுக்கையில் படுத்தவன் தான், சாயந்திரத்துக்குள் ஜூரம் விறுவிறென்று ஏறியது. மார்பு கொதிப்பேறிக் கனன்றது; கண்கள் சிவந்து, கண்ணீர் கசிந்தது; அனல் மூச்சு வாங்கியது... டாக்டர் வந்து பார்த்தார். ஒருநாள்... மறுநாள்... இரண்டு நாள்... மூன்று நாள். ஜூர வேகம் தணியவில்லை. நாலாம் நாள் இரவு பையன் கண்ணையே திறக்கவில்லை. எட்டு மணிக்கு டாக்டர் வந்து பார்த்தார், ஏதோ மருந்தெழுதிக் கொடுத்து, உடனே வாங்கிக் கொடுக்கும்படி சொன்னார். இருக்கும் ஜுர வேகத்தில் இரவில் நிலைமை மோசமாகக்கூடும் என் லும், அந்த மருந்தைக் கொடுத்த பின்னர்தான், காலையில் எதுவும் நிச்சயம் சொல்ல முடியும் என்றும் சொல்லிப் போய்விட்டார். உடனே வண்டிக்கார வேலுவை அழைத்து, பணத் தையும் சீட்டையும் கொடுத்து விரட்டினார் கிழவர். வே.லு. கடைகடையாய் ஏறி இறங்கினான். மருந்து கிடைக்க வில்லை. வெள்ளை மார்க்கெட்டும், கள்ள மார்க் கெட்டு.” கை விரித்தன. பதில் கூறச் சிலர் தயங்கினர்; பிகு. பண்ணினர்; மறுத்தனர், மணி எட்டு, எட்டரை, ஒன்பது , ஒன்பதரை. ஜங்ஷன்-டவுன்-பாளையங்கோட்டை மூன்றையும் வேலு சுற்றி வந்துவிட்டான். மருந்து கிடையாது. இரவு பத்து மணிக்கு வெறுங் கையோடு திரும்பினான் வேலு. கிழவருக்கு ஆத்திரமும் கவலையும் பெருகின, தானே சென்று வரலாமென எண்ணினார். ஆனால் மணி பத்தரை. மருந்துக் கடைகள் பூட்டியிருக்கும், மேலும் தனக்கும் கடைக்காரர்கள் அதே “பேப்பே' பாடந்தானே ஒப்புவிப் பார்கள் என்ற எண்ணம் அவர் மனசைக் கொந்திற்று . பிள்ளையவர்கள் தலையில் கைவைத்தவாறு, இடிந்து போய் உட்கார்ந்தார், மனம் நிலை கொள்ளாமல் தள்ளா"