பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 ஆள வந்தான் <்கள்ள மார்க்கெட்?' என்றான் சிறுவன். "ஒழிக” என்றார் கிழவர். “பதுக்கல்காரனை” என்றான் பேரன், சிறையிலடை" என்றார் தாத்தா. செங்கொடிக்கு என்றான் ராசையா. 4"ஜே! என்றார் அனவரத விநாயகம் பிள்ளை. எனினும், ராசையாவின் ஜன்னி வேகம் குறையவில்லை. பலப்பம் தெளிவு குலைந்து, வார்த்தைகள் உள்வாங்கின. பிறகு வெறும் முனகல். கிழவர் பையனைப் பார்த்துக். கொண்டே இருந்தார், புலப்பம் நின்றது; மூச்சு மட்டும் திக்கித் திணறி வந்தது; பிறகு அதுவும் 2ளசிமாதிரி இழைய ஆரம்பித்தது....... இரவு பன்னிரண்டு மணிக்கு- மகனைப் பறிகொடுத்த கோமதியின் கதறல் பிள்ளை யவர்கள் வீட்டை உலுக்கியது; ஆளப்பிறந்த ராசையாவின் சில்லிட்ட உடலின்மேல், பிள்ளையவர்களின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு வெந்நீர் விழுந்து தெறித்தது, 1947