பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைப்பு ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்: வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி

  • காத்துக் குடி. த்துவிட்டு வரவோ, பழைய புத்தகக் கடை

யில் பரிவர்த்தனே உண்ணவோ அல்லது மறு நாள் பாட்டுக்கு யா: பேனும் 'அஞ்சு பத்து' கைமாத்து வாங்கவோ, வரவேண்டிய க) தக்கு முன்பணமாக தவணை அச்சாரம் ாெ ங்கவோ மனசும் இல்லை; வழியும் இல்லை. “கொக்குக்கு ஒன்றே மதி' என்ற மாதிரி எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு கப் காப்பிதான், ஆனால், பாக்கெட்டில் அதற்கு வழி உண்டா என்றால், அது இனிமேல் தான் தெளிவுபட வேண்டிய விஷயம். என் பையில் ரூபாய்க் கலத்தில் காசு புரளும்வரை எனக்குக் கணக்கும் தெரியாது; கண்ணும் தெரியாது. கரன்ஸிச் செலாவணி என்ற நிலை பிறழ்ந்து? காசுச் செலாவணியில் வரும்போதுதான் நான் கையைக் கொஞ்சம் இறுக்கிப் பிடிப்பேன், ஆனால் தும்பைவிட்டு, வாலைப் பிடித்தால் முடியுமா? ..ஸ் ஸ்டாண்டுக்கு வருமுன்னர் பையில் பஸ்ஸுக் கேனும் காசு இருக்கிறதா என்று துழாவினேன். ஒண்ணே காலணாவுக்கு மேல், ஒரு துரும்புகூட இல்லை. காப்பிக்குக் காசு இல்லை, ஆகவே இன்று வீட்டுக் காப்பிதான். -ஆனால், அந்த 'மூணே முக்கால் துட்டு'க்குச் செலவு வேண்டுமே! ஆபீசிலிருந்து என் வீடு அதிக தூரமில்லை. குறுக்குப் பாதையாக நடந்து சென்றால், முக்கால் மைல் இருக்கும்.