பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமணிப் பதிப்பகம் பெறும் ஊதியமும் குருசாமியைக் கிளறிவிட்டன. ஆகவே ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் போன்ற இலக்கியப் புல்லுருவி களையும் களைந் தெறிய வேண்டும் என்று அவர் கருதிய தோடு, ஷேக்ஸ்பிய ரின் சோக நாடக தத்துவங் களைப் பற்றி பிராட்லி எழுதியதைத் திருப்பித் திருப்பிப் படித்த தனாலோ என்னவோ, தாத்தாச்சாரியாரைக் கவிழ்ப்பதற்கு அவரு டைய பிரஸ்தாப பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள வும் நினைத்தார் குருசாமி, இதற்கெல்லாம் பா திை வகுத்துக் கொடுத்த மாதிரி, ஸ்ரீமான் அண்ணாமலைப் பிள்ளை யின் "தமிழ் இலக்கிய விமரி சனம்' ஸ்ரீமான். பஞ்சந்தத்தின் சிபாரிசின்பேரில் ஞான மனிப் பதிப்பகத்துக்குள் வந்துசேர்ந்தது. அண்ணுயலைப் பிள்ளையும், தாத்தாச்சாரியும் ஆரம்ப காலத்தில் மூச் சில் உடன்படிக்கை செய்து கொண்ட சேம்பர்லேன்-ஹிட்லர் மாதிரி இருந்து வந்தார்கள்; எனினும், பின் னால் காலப் போக்கில், யுத்தப் பிரகடனம் செய்த சர்ச்சில்-ஹிட்லராக மாறிவிட்டனர். எனினும், இருவரது நோக்கமும் மறு மலர்ச்சியைக் கண்டிப்பது தான்; ஆனால், பிள்ளையவர்களின் 'இலக்கிய விமரிசனம்' மறுமலர்ச்சியாளர்களை நையாண்டி செய்வதோடு மட்டுமல்லாமல், ஸ்ரீமான் தாத்தாச்சாரி யார் தலையிலேயும் கை வைக்கப் பார்த்தது. இம்மாதிரி யெல்லாம் ஏதாவது நேரும் என்பதை முன்கூட்டியே; தெரிந்துவைத்தவர் மாதிரி, பஞ்சநதம் அந்த நூலை அவசர அவசரமாக அச்சேற்றும்படி தாத்தாச்சாரியாரிடம் சொல்லி வந்தார். தாத்தாச்சாரியாரும் வழக் 2ம்போலவே, அந்த நூலின் மூலப்பிரதியை வாசிக்காமலே, 'எ ல்'ல 7ம் புளூ பில் பார்த்துக் கொள்ளலாம்' என்ற மனத் தெம்போடு, அதை அச்சுக்குக் கொடுத்து விட்டார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் குருசாமி தமது நண்பர் 'சுயேச்சை' சொக்கலிங்கம் சொல்லிக் கொடுத்த மாதிரி, தாத்தாச்சாரியாரை வச மாய்' 10க்கி வேட்டுவைக்கத் திட்டமிட்டார்.

  1. . க. -!!