பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமணிப் பதிப்பகம் 172 “ “ இப்ப என்ன பண்ண முடியும்? மானுஸ்கிரிப்டை அச்சுக்குக் கொடுக்கிறப்பவே கவனிச்சிருக்கனும். ம்..... நீங்கள் தான் என்ன பண்ணுவிங்க. அவசரத்திலே குடுத் தாச்சி. உங்க கண்ணுலையே அகப்படலேன்னா, எனக்கு அல் வளவு லேசிலெ அகப்படுமா?” என்று நக்கல் பண்ணினார் குருசாமி.

  • 'சரி, இப்ப நாம் இதுக்கு என்ன பண்ண முடியும்?”

"'பரவாயில்லை, சார். நீங்க மட்டும் காரசாரமா ஒரு முன்னுரை எழுதிப் பிடுங்க, மறுமலர்ச்சிக்காரங்களை இப் படியும் திட்டுவாங்க என்பதைக் காட்டுற மாதி?, ரொம்ப வன்மையா கண்டித்து ஒரு முன்னுரை எழுதிட்டா, உங்க எண்ணமும் நிறைவேறினாப்லெ இருக்கும்; அண்ணாமலை மூஞ்சியிலேயும் கரியைப் பூசினாப்லெ இருக்கும் என்று மந் திராலோசனை கூறினார் குருசாமி. ': * சரி; நாளையே எழுதிப்பிடுவம் என்று கூறிக் கொண் டார் ஆசிரியர். சுயேச்சை. எழுத்தாளர் சொக்கலிங்கம் சொல்லீடர் மாதிரி, இரண்டு பெருச்சாளிகளும் ஒரே இடத்தில் மாட்டிக் கொள்ளப் போகின்றன என்ற உற்சாகத்தில் தன்னுள் நகைத்துக் கொண்டார் குருசாமி, மேலும், புற்றுக்குள் ஊரான் கையை விட்டுப் பார்ப்பதுபோல், அண்ணாமலையைக் கொல்ல தாத்தாச்சாரியாரை யே 3கக் கருவியாக உபயோ கிக்க முடிந்த செளகரிய சந்தர்ப்பமானது, அவருக்கு வெள் ளையரசாங்கத்தின் ராஜதந்திரத்தை நினைவூட்டியது. டெலிபோன் மணி அடித்தது. "ஹலோ .. ""..,ம்.., யாரு? டைரக்டரா கேட்டாரு - - << ஆமா, தாத்தாச்சாரியார்தான் பேசறேன்--