பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் கணவன் மறு தாரம் கல்யாணம் பண்ணிக்கொண்டான். இப்போது கோர்ட் அவன்மீது வழக்குத் தொடுத்தது, குற்றம் நஜுவாயிற்று. கணவனுக்குத் தண்டனை விதிக்கப் 11. பட்டது, சிறைவாசம்; அபராதம், கணவன் அபராதத்தையும் கட்டி, சிறைக்குப் போனான். புது மனைவியும் முதல் மனைவியும் வெளியே இருந்தனர். யுத்த காலம்; 1944 அல்லது 45. மவுண்ட் ரோடு ரவுண் டாணா: எல்பின்ஸ்டன் கொட்ட.. RSSகக்கு எதிரில், நடை மேடையில்... நீக்ரோ சிப்பாய் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்,, தசரா அல்லது முஹரம் பண்டிகை, கரிவேஷம் போட் டுக்கொண்டு ஒருவன் தப்பட்டை மேள சகிதம் ஆடிப்பாடி வந்தான். நீக்ரோ சிப்பாயைக் கண்டான். அவன் எதிரே சென்று குதித்துக் குதித்து ஆடினான், நீக்ரோவனுக்குக் கோபம் பொங்கிற்று; கரிவேஷக்கார னைக் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். கலவரமா கி விட்டது. நடை மேடையில் கன்னங்கறுத்த ஓர் ஆங்கிலோ இந்தி யப் பெண் அமெரிக்க டாமியோடு கைகோத்து உலாச் சென்றாள். இருவரும் அந்தக் காட்சியைப் பார்த்தனர். அவள் தன் இரவல் நாயகனை ஏதோ அர்த்த புஷ்டி. யோடு பார்த்தாள்; புன்னகை புரிந்தாள். 1951)