பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென் றிலன் என்றபோதும்- 19 ஆனால் அர்ஜுனனோ எவ்விதச் சிரமுமின்றி வில்லை. தாணேற்றினார்; வளைத்தார். நிபந்தனைப்படி குறித்த லட்சியத்தையும் அடித்து விட்டார்! வாய்விட்டுச் சிரித்துக்கொண்ட மண்டபம் முழுவதும் மௌனத்தில் சமாதி யடைந்தது. எனக்கு என்னை உணரச் சக்தியில்லை, பக்கத்தில் நின்ற திருஷ்டதும்யுனனை நிமிர்ந்து பார்த்தேன். அவன் தலை தொங்கிப் போயிருந்தது . நான் அர்ஜுனனைப் பார்த்தேன். அவருடைய பார்ப் பன வேஷம் என் கண்களை மழுக்கியது. அர்ஜூனன் சபையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு " அண்ணனைப் பார்த்து, துருபத குமாரா என்று அருமை யாக அழைத்தார். குனிந்த தலை நிமிர்ந்து அண்ணன் என்னைப் பார்த்தான், பிறகு வாய் திறந்து சொன்னான்: கிருஷ்ணை, அவருக்கு மாலையிடு. கையிலுள்ள மாலை நடுங்கி பூக்கள் உதிர்ந்தன, எனி னும் அவருக்கு மாலையிட்டேன். மாலையிட்டுவிட்டு கர்ணன் இருந்த பக்கம் திரும்பினேன். அங்கு அவரைக் காண வில்லை . சபை கலைந்தது. நானும் அர்ஜுனனுடன் நடந்தேன். சகோதரர் நால்வரும் பின்னே வந்தனர். குயவர் சேரி சென்றதும், புத்திரர் சொன்ன சொல்லுக்கு, 'ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று குந்தி தேவி கூறியதும், நான் மீண்டும் மனமுடைந்தேன், குந்தி தேவியின் அறியா வார்த்தை . இது என்று நானும். அப்போது நம்பினேன். ஆனால், இன்று கர்ணனின் ஜென்ம ரகசியம் வெளியான இன்று தான் குந்திதேவியின் அந்தச் சொல் மிகவும் நிறுத் துச் சொன்ன சொல்லாகத் தோன்றுகிறது. 'ஐவருக்கும்” என்றவுடன் என் நெஞ்சம் நடுங்கியது - அரண்மனைக்கு வந்தபின் அப்பா குந்தியின் முடிவைப் பல மாக எதிர்த்தார். தருமரோ தம் தாயின் நாவில் அ தரு