பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை 41 வார்ப்பது, பரிமாறுவது எல்லாம் அவரே கவனித்துக் கொள்வார். இலை எடுத்துப்போடும் வேலை திருநெல்வேலி யில் சாப்பிடுவோரையே சாருமாதலால், பிள்ளையவர்களின் சுயமரியாதையும் எந்த விதத்திலும் பாதிக்கப் படுவதில்லை , பிள்ளையவர்களின் பலகாரக் கடை அந்த வட்டாரத் திலேயே நல்ல பெயர் பெற்றது. காலையில் கருப்புக்கட்டிக் கடுங்காப்பி மிளகாய்ப் பொடி தோசை, அதன்பின் ஒன்பது மணிக்கெல்லாம் பள்ளிச் சிறுவர்களுக்கு உபு யோககரமான சுசியம், எள்ளுருண்டை 6என்ற ஸ்வீட்டுகள், வாழைக்காய் பஜ்ஜி, பக்கடா என்ற ஸேவரிகள், அதன் பின், உச்சிவேளை நெருங்கி விட்டதனால், கடை தேடிவரும் ரொக்கப் புள்ளிகளுக்கும், ஒன்றிரண்டு வாடிக்கைக்காரர் களுக்கும் ஒரு புளிக்குழம்பு, மிதுக்குவத்தல், ஒரு துவரம், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது கொத்துமல்லித் தொக்கு என்ற சம்பிரமங்களுடன் சாப்பாடு. காலையில் மிஞ்சிப் போன இனிப்பு, காரவகைகளைத் தீர்த்துக் கட்டும்

  • கிளியரன்ஸ் ஸேல்ஸ்' சாயந்திரம் நடைபெறும். இரவு

எட்டு மணியிலிருந்து, பத்து மணிவரை தோசை மிளகாய்ப் பொடி, சுக்குத் தண்ணீர், பக்கடா முதலியன கிடைக்கும், பிள்ளையவர்களின் கடை பெரிய " ஹோட்டல்களைப் போல் ரத வீதியில் அமையாவிட்டாலும் நல்ல ஜன நடமாட்டமுள்ள முச்சந்தியில் அமைந்திருந்ததால், வியா பாரத்தில் என்றும் காய்ச்சல் வந்தது கிடையாது. என் றைக்கும் நல்ல கிராக்கி தான், ஆலங்குளத்து நாடாக்க மார்கள் மொட்டை வண்டிகளில் ஊத்து மலை விறகு, பனை யோலை, பனங்கருப்பட்டி, ஆலங்குளத்து மிளகு வற்றல் முதலியன ஏற்றி வந்தால், பிள்ளையவர்கள் கடைக்கு அருகி லுள்ள வண்டிப் பேட்டையில்தான் . தங்கவேண்டும். இப்படி ஆலங்குளத்திலிருந்து வரும் நாடார்களுக்கும், வடக்கே மானூர்ப் பக்கமிருந்துவரும் தேவமார்களுக்கும் நாறும்பூநாத பிள்ளையின் கடைதான் வயிற்றுக்கும் செல் வுக்கும் கட்டிவரும். பிள்ளையின் கடையில் அளவுச் சாப்