பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் நடா புடு சுருட்டு ஒன்று வாங்கிட்ட பற்றவைத்துக்கொண்டு நிலாக் காலமாயிருந்தால், குளக்கரைப் பக்கம் செல்வார்; இல்லையெனில் வீட்டுக்குச் செல்வார். வீட்டுக்கு வந்து மனைவி 1.பக்குவமாய்ப் பிசைந்து வைக்கும் பழையதைச் சாப்பிட்டுவிட்டு, வெளித் திண்ணையில் படுக்கையைப்போடு வார், போட்டபின் இரப்பில் சொருகியிருக்கும் கந்தரனு: பூதி, விநாயகரகவல், கந்தரலங்காரம் என்ற நூல்களை எடுத்து, முனிஸிபாலிட்டியார் புண்ணியத்தில் விழும் மின் சார ஓளிப்பில் சில பகுதிகளைப் படிப்பார். நிலாக் காலமா விருந்தால், மின்சார ஒளி கிடையாத காரணத்தால், மனப் பாடட2மான பகுதிகளை வாய்விட்டுப் பாடிவிட்டு, என் அப்பனே, முருகா!” என்று கூறி, பிளந்த வாயில் சொடக்கு விட்டு, சோம்பல் முறித்துவிட்டு, தலையைச் சாய்ப்பார், இதெல்லாம் சென்ற பத்து வருஷங்களுக்கு முந்தியம்: விவரம். அவருடைய வாழ்க்கைப் பாதையில். வண்டி.யைக் குடைசாய்த்து விடும் நொடியோ பள்ளமோ குறுக்கிட்டு

  1. டவில்லை; வாழ்க்கை என்னவோ அவருக்கு சுவாமி"

நெல்லையப்பர் ஹைரோட்டில் காலாற நடந்து போவது (போ ல த் தான் தோ 6ன்றியது. இடையில் திருநெல்வேலியில்” வந்த வெள்ளம், காலரா, காங்கிரஸ் தேர்தல்கள் முதலில் 23 எவையுமே பிள்ளையவர்களின் தெய்வ பக்தியையும், வாழ்க்கை நிலையையும் பாதித்ததில்லை, ஆனாலும் யுத்தம் ஆரம்பித்த பின்பு, பிள்ளை யலர்" களுக்கு தாமரையிலைத் தண்ணீர் போலிருந்த வாழ்வில் ஏனோ சிறிது பிடிதளர்ந்து, லௌகிகப்பற்று ஜாஸ்தியாய்" விடிந்தது . இதற்குக் காரணம் எதுவென்று திட்டமாய்ச் சொல்லமுடியாது, தம்முடைய பேர் சொல்ல நிற்கும் முருகையாவுக்கு ஏதாவது பண்டமாய் மீத்து வைக்க: வேண்டும் என்ற கருணையோ, உழைத்து உழைத்து ஓடாய்ப்போன அருமை மனைவிக்கு ஏதேனும் வழி தேடி.