பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை வைக்கவேண்டும் என்ற புருஷார்த்தமோ - எதுவென்று .55 றமுடியா விட்டாலும், பிள்ளையவர்களுக்குத் திடீரென்று

பணம் சேர்க்கவேண்டும் என்ற ஆசை விழுந்தது மிகவும்

அதிசயமானது தான். ஆனாலும் சமயங்களில், பிள்ளையவர் கள், நேத்துத் தவணை நோட்டைத் தூக்கிக்கிட்டு நிலுவை பிரிச்சவனெல்லாம் இன்னிக்கு பட்டறையிலே முதலாளியா யிருக்கான் என்று சொல்லுவதிலிருந்து அவ ருக்கும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஸ் தானம் பெறவேண்டும் என்ற ஆசை உண்டானதென்று ஊகிக்கலாம். அதை நிறை வேற்றுவதற்காகத்தான் அதற்கு மூலா தாரமான பணம் சேர்க்கும் முன்னணியில் அவரும் கலந்து கொண்டார் என்றுதான் எல்லோரும் கருதினார்கள். நாட்டில் அகவிலை ஏறி, சரக்கு களுக்குக் கிராக்கி ஆரம்பமாகும் வேளைக்கும், மக்கள் கையில் புரளும் வரும் படிப் பணம் ஏற்றம் காணாமலிருந்த காலத்துக்கும் இடையில் லுள்ள இடைக் காலத்தில், நாறும்பூநாத பிள்ளைக் கடை கில் திடீரென்று வியாபாரத்தில் ஒரு நல்ல விறுவிறுப்பு ஏற்பட்டது. பெரிய ஹோட்டல்களிலெல்லாம் பண்டன் களின் விலையை உயர்த்தும்போது, நாறும்பூநாத பிள்ளை மட்டும் தெரிந்தோ தெரியாமலோ, சாமான்களின் கனபரி மாணத்தைக் குறைத்தும், விலைவாசி நிர்ணயத்தைச் சிதைக்காமலும் இருந்த செய்கை ஒரு விதத்தில் சரியான வியாபார தந்திரமாகவே அமைந்தது. ஆனால், தம்மை &uறியாமலேயே காலக்கிரமத்தில் கையாடி விட்ட இந்த வியாபார நுணுக்கத்தை ஒரு வரு ஷத்திற்குப் பிறகுதான் நாறும்பூநாதரே உணர்ந்தார். இம் முறையில் நாளா வட்டத்தில் நாறும்பூநாத பிள்ளைக்கு வியாபாரத்தில் சரியான பிடிப்பும், விளம்பர மோகமும் ஏற்பட்டதன் விளைவாக, எடுத்துக் கட்டிய கடையும், ஒரு கையாளும், வாசலில், “ முருக விலாஸ் சைவாள் சாப்பாட்டுக் கிளப்-மண்பானைச் சமையல்- புழுங்கலரிசிச் சாதம்~வடை பாயசத்துடன் அணா நா இ .