பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை, விடினும், உரத்திக் கொண்டே யிருந்தது. பய லுக பணம் பிரிக்க வரும்போது பாத்துக்கிடலாம் என்று மெத்தனத்தில் இருந்து விட்டார் பிள்ளை. பட்டறையில் அமர்ந்திருந்த நாறும்பூநாத பிள்ளை எழுந்திருந்து , ' 'வாருங்க- என்ற இழப்புக் குரலில், நடையேறிவரும் திருக்கூட்டத்தை வரவேற்றார். பெரிய கோயில் பட்டர்சாமி, தர்மகர்த்தா பிள்ளை இருக்கும் போது, அவர் ஏன்? என்று கேட்டால், "* என்ன?' என்று குரல் கொடுப்பவரும், அவரில்லாதபோது தர்மகர்த்தா பிள்ளையின் ‘அந்தரங்கக் காரிய தரிசி' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்பவருமான சங்கரலிங்கம் பிள்ளை, தர்மகர்த்தா பிள்ளை, உள்ளூர் உ. மணியம், இன்னும் இவர்களுக்குப் பின்னால் மேல் துண்டை இறக்கி அரையில் கட்டி புடை சூழ்ந்து வரும் காக்காய்கள், 'அந்தக் காக் காய்களுக்கு முன்னே பெருமிதமாய் நிமிர்ந்து வரும் பெரிய கோயில் வில்லைச் சேவகன்-இத்தியாதி வர்க்கம் வாசல் தடையேறிக் கடைக்குள் நுழைந்தது. பிள்ளையவர்கள் எழுந்திருந்து அந்தச் சிவநேசச் செல்வர்களை வரவேற்று பிறகு உள்ளே திரும்பி. ஏலே, ஐயா, காப்பி கொண்டுவாடா என்று குரல் கொடுத்து விட்டு உட்கார்ந்தார். அதற்குள் பெரிய கோயில் பட்டர்சாமிகள் மனசிலே

  • இருந்திருந்து இந்தப் பய கடையிலா காப்பி சாப்பிடுவ து?”

என்ற எண்ணம் உறுத்த, காப்பி ஏதுக்கிங்கிறேன்? இப்பதான் பெரிய போத்தி கடையிலே தாக ஸாந்தி யாச்சு! என்று விளம்பரப்படுத்தி காப்பியை நிறுத்த முயன்றார்.