பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை “வீணா நேரத்தைக் கடத்தாதிய, நமக்கு இவ்வளவு' தான் தாங்கும்” என்றார் பிள்ளை. தர்மகர்த்தா பிள்ளை வேறு வழியில்லாமல் பிள்ளை" யவர்கள் கொடுத்த பதினொரு ரூபாயை வாங்கிக் கொண்டார். காரியம் முடிந்த பின், வந்த திருக்கூட்ட..?" பேச்சை வளர்த்தாமல், ' நாங்க வர்ரோம்' என்று கிளம் பிற்று. பட்...ர்சாமிக்குக் கொடுத்த காப்பி மேஜைமேல் அப்படியே இருந்தது. ஈக்கள் அதை மொய்த்துக் கொண்டிருந்தன, பிள்ளையவர்கள், 2.யலுக குரங்குப் பிடியாத்தான் புடிக்கானுவ" என்று முனகி விட்டு, “ஏலே ஐயா. அந்தக்காப்பியைத் தூர ஊத்து, பாட்டி பார மூதிக்கு என்ன திமிருங்கே? என்று கூறினார், பின் பிள்ளையவர்கள் ஏதோ குற்றம் செய்து விட்டது போல், திருதிருவென்று விழித்தார். அதற்குள் பக்கத்துக் கடையிலிருந்து வந்த ஆறரை மணி யுத்தச் செய்திகள் கர்ஜிக்க ஆரம்பித்தன. உடனே பிள்ளையவர்கள் தம் புத்திரச் செல்வம் முருகையாலை அழைத்து, பட்டறையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு, நடையை விட்டுக் கீழிறங்கினார். கடையை விட்டு பிள்ளையவர்கள் வீதியில் காலடி வைப்பதற்கும் ஐ. பி. பிள்ளையும், பண்ணையும் வந்து சேருவதற்கும் சரியா யிருந்தது. என்ன பிள்ளைவாள், இந்தப் பயலுக உங்க கடைக்கு வந்துட்டுப் போறானுக போலுக்கே என்று ஆரம்பித்தார் பண்ணை , "ஆமா. உயிரை வாங்கிட்டானுக” என்றார் பிள்ளை. '* * நாங்க சொன்னபடி கையை விரிச்சிட்டியள்லெ” என்றார் ஐ. பி. பிள்ளை .