பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் யாள் கிழவியோ என் வாழ்க்கையையே சுருதி பேதம் செய்துவிட்டாள்! சங்கீதத்தில் சுருதிபேதம் செய்தாலும், மீண்டும் பழைய நடையைப் பிடித்து விடலாம்; வாழ்க்கையிலே, இதயத்திலே சுருதி பேதம் செய்தால் மீண்டும் அதைச் சரிப்படுத்த முடியுமா? என்று கதையை முடித்தார். எனக்கு நாகமுத்துவின் கதை பெரிய புதிராக இருந் தது . அ வர து சோகக் குரலுக்குப் பின் நான் எதுவும் பேச விரும்பவில்லை. சூழ் நிலையை மாற்றுவதற்காக, எழுந்திருந்து விளக்கைப் போட்டேன்; மெளனமாக வெற்றிலையைக் காம்பு கிள்ளிப் போட்டு ஒதுக்கிக் கொண் டேன். பிறகு, மெதுவாக நேரமாகிறது. நான் வருகி றேன் என்று சொல்லி எழுந்தேன்.

  • ' வடிவே லு, டி.ரைவரைக் கூப்பிட்டு ஐயாவைக்

கொண்டு விட்டுவிட்டு வரச்சொல்லு” என்றார் நாகமுத்து, எங்களுக்குள் வேறு பேச்சு நிகழவில்லை. மறு நாள் நான் நாகமுத்துவின் பேட்டிகை: எழுதிக் கொண்டிருந்தேன். அந்த பேட்டி விவரம் பின் வருமாறு முடித்திருந்தது . நாகமுத்துவுக்கு குழந்தைகள் உண்டு : நாடகப் பிரியா, கோகிலப் பிரியா, . நாம தாராயணி, வேப்பிரியா, லதாங்கி, சரசாங்கி, கல்யாணி,..... இவர் களில் அவருக்குச் சீமந்த புத்திர பாக்கியமாக விளங்குவதும் தோடி தான். 1949