பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கொடைக் காலம் மட்டுமல்லாது, மற்றக் காலங் களிலும் சுடலையை நேர் நின்று தரிசிக்கும் தெம்பும் திராணி Nuம் பெற்றவன் ஒருவன் தான் உண்டு. அவன்தான் கட்டாரித் தேவன், கோழைப்பட்ட மனசுடையவர் களுக்குக் கட்டாரித் தேவனைக் காணவே தைரியம் வேண்டும். கடலையே உயிர் பெற்று உலாவுவது போலி ருக்கும், அவனுடைய தோற்றம். கரு மெழுகிலே திரட்டிச் செய்த யவனப் பொம்மைபோல், அடிக்கொரு அசைவும், திமிரும் காட்டி, வரிந்து கட்டிய நரம்பு முடிச்சுக்களிடையே திருகி விறைப்பேறும் தசைக்கூட்டம் அவனுடைய மேனி வளத்தை எடுத்துக் காட்டும். கத்தியைக் கொண்டு குத்தினாலும் உள்ளே இறங்காது என்னும்படி இருக்கும், அவனது தேக வலிமை. அவன் வாயிலிருந்து எப்போதும் சார4 4 நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும். ரத்தத்திலே' தோய்த்தது , போன்ற சாயவேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருப்பான், நெற்றியில் வெட்டப்போகும் கிடா வுக்கு வைத்த அரக்கு லைப் போல், கோயில் குங்குமம் தீயாய்தி தெரியும். கட்டாரித் தேவன் சுடலை மாடசாமி கொண்டாடி.. அவனுடைய குடும்பத்தில் தலைமுறை தலை முறையாக இருந்துவரும் வழக்கம் அது. அதனால் தான் எந்த ராத்திரி யானாலும் சுடலையைத் தரிசிக்காமல் கட்டாரி வீடு திரும்பு வதில்லை, மேலும், அவனுடைய நில புலங் சளும் அந்தப் பத்திலேயே இருந்ததால், அந்தப் பிராந்தியத்திலே தான் சுற்றிக் கொண்டிருப்பான். கோயில் குளத்தான் சாராயக் கடையம் சமீபத்திலேயே இருந்தது அவனுக்குச் சௌகரிய மாயிருந்தது. மேலும் கட்டாரித் தேவனின் தினசரிப் (பொழுது ஆற்றங்கரையிலே தான் கழியும், வயலில் உழைத் தவித்து வரும்போது, பேச்சுத் துணைக்கு ஒருவரும் கிடைக் காவிட்டால், மாந்தோப்பைக் காவல் புரியும் இசக்கியிடம் வந்து பேசிக் கொண்டிருப்பான். இசக்கி நாட்டாண்மைக்காரத் தேவரின் மனைவி, நல்ல மஞ்சள் கடம்புக் கட்டையில் செதுக்கி நிறுத்திய