பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னே இருந்த கிளாஸ் சாரF : த்தை வாயெடுக்காமல் குடித்துக் காலி செய்து விட்டு, குச்சிக் கறித்துண்டு ஒன்றை எடுத்து, கடைவாயிலிட்டுச் சுவைத்தான் கட்டாரி. என்ன அண்ணாச்சி, தேரத்தோடேயே வந்துட்டி --பளர்? வார வளியிலே வீட்டுக்குப் போயிட்டு வந்தேன்” என்று விசாரித்துக்கொண்டே, வீராசாமிப் படையாச்சி உள்ளே நுழைந்தான். ஏற்கெனவே அளவு தாண்டி, 'கிறிச்சி' கிளம்பி தலை சுற்றியாடும் கட்டாரி, வீராசாமி வந்ததை உணர்ந்து கொண்டான். மரத்துப் போன உதடுகளைப் புறங்கை.!7ல் உரசித் துடைத்துக் கொண்டு, “ “யாரது, வீராசாமியா? வாடா. வந்து உட்காரு” என்று அருமையாய் அழைத் தான். பிறகு கடைக்கார நாடாரைப் பார்த்து, நாடாரே, இன்னம் ரெண்டு கொண்டாரும். முட்டை இருக்கு.தா? இருந்தா அதுவும்................. ஒண்ணுமில்லியா? சர்த்தான், ஏதாவது கொண்டாரும்” என்று உத்திரவிட்டான். நாடார் கொண்டு வைத்த சாராயத்தை இருவரும் மடக்கு மடக்கென்று குடித்தார்கள். குடித்து விட்டு, சுவாசத்தை அடைக்கும் கசப்புக் கமறலைத் துடைக்க, உடனே இரண்டு கறித் துண்டுகளை எடுத்துக் கடித்துக் கொண்டார்கள். குடித்துக் குடித்து இருவருக்கும் போதை கிளம்பி கண் வெள்ளை சிவந்தது. உடல் முழுவதும் வெறி பரவி, மரத்துப் போகும் உணர்ச்சியினால் ஏற்படும் சிலுசிலுப்பும், மயக்க நிலையில் சொக்கி வரும் இன்பமுமாக அவர்களுக்கு இருந்தது. இனிமேலும் மேலே சென்றால் வண்டி குடை சாய்ந்து விடும் என்று உணர்ந்த கட்டாரித் தேவன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். வீராசாமியும் கட்டாரியின் கைத் தாங்கலில் எழுந்து கடையை விட்டு வெளியே , வந்தான்,