பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைத் தீ 79 பந்தங்கள் பசி நாக்குகளைச் சுழற்றிச் சுழற்றி எரிந்து கொண்டிருந்தன. பம்பை..,ம் பறைமேளமும் கணக்ண வென இரைந்து குமுறும் ஒலி அக்கரை நத்தத் து வயல் வெளியில் மோதித் திரும்பி, மீண்டும் கருப்பன் துறை பனை வினைக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருந்தது . சாராயக் கடையிலிருந்து வந்த கட்டாரித் தேவன் சுடலையின் கோயில் முன் சென்று உட்கார்ந்தான் சுடலையின் முன், சாராயப் புட்டியும், காரப் புகை 2.லைச் சுருட்டும்' இருந்தன, பொங்கிப் பொரித்துப் படைத்த சோறும் கறியும் ஆவி வர, புலால்மணம் வீசிக்- கொண்டிருந்தது. பலி கொடுத்த ஆடு கோழிகளின் ரத்தம் கோயிலின் முன்னுள்ள மண்ணில் உறைந்து பொருக்காடிப் போயிருந்தது. கட்டாரித்தேவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான், கண்களின் கிறக்கம் சாராய வேகத்தைக் காட்டியது. மட்டச் சாம்பிராணிப் புகையும், ஊதுவத்தி மணமும், படைப்புச் சோற்றிலிருந்து எழும் புலாலின் நாற்றமும் அவனை மயங்கச் செய்துவந்தன. பம்பையின் 1டங்காரமும், உறுமி மேளத்தின் குமைந்து வரும் சிலுசிலுப்பும், தப்பறையின் ஓலமும் அவன் செவி களைத் தாக்கி, காதுச் சவ்வுகளை மரத்து அடைத்துப் போய் இரை யச் செய்தன. தலையாட்டம் கொடுத்துக் கொண்டே கட்டாரித் தேவன் கண்களை ஒரு சுழற்று சுழற்றினான். தாரத்தில் இசக்கி பச்சை நிறக் கண்டாங்கிச் சேலையைச் சரிபண்ணிய வாறே சிரித்துக்கொண்டு நின்றாள். இசக்கியின் வனப்பு கட்டாரியின் கண்களை ஈர்த்தன. கட்டாரிக்கு தலைக் கிறக்கம் அதிகமாயிற்று. சுடலையையும் இசக்கியை டம் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தான், திடீரென ஒரே ஆகாகாரம் செய்து கொண்டே துள்ளி யெழுந்தான் கட்டாரி, அவன் உடல் கிடுசிடென்று