பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும் இரும்பு வளையல்கள் அணிந்து, தலை விரி கோலமாய், சுண்ணாம்புக் கீறலைப் போன்ற பல் வளைவுடன் ஒரு கரும் ராஜஸப் பெண் சிரித்துக்கொண்டே வருகிறாள். தன் கையிலுள்ள கும்பத்திலிருந்து ஒளி வீசும் சந்தனக் குழம்டை. வாரி வாரி அவன் மீது பூசுகிறாள். குழம்; பட்ட இடங்க ளெல்லாம் பொத்துப் பொரிகின்றன. உடம்பெல்லாம் சந்தன மணம்! எனினும் தாங்க முடியவில்லை, ஒரே எரிச்சல்1 அவன் ஓடிப்போய் தண்ணீரில் விழுகிறான். உடம்பைக் கழுவுகிறான். சந்தனத்தோடு உடம்பே சுரைந்தொழுகு கிறது. கை விரல்களைப் பாறையில் தேய்த்துத் தேய்த்து -மணத்தைப் போக்க முனை கிறான். தண்ணீரில் நனைத்து, கைகளை உதறுகிறான். விரல்கள் உதிரும்' மலரிதழைப் போல அறுந்து விழுகின்றன. கை விரல்கள் கால் விரல் கள் -- சதைப் பகுதி எல்லாம் கழன்றோடுகின்றன.... இது என்ன மாயம்'? குஷ்டமா?' அவன் விழித்துப் பார்க்கிறான். அவன் மீது ஒரு மூஞ்சுறுக் குஞ்சு விழுந்தடித்து ஓடியது. கைகள்--கால்கள்--உடம்பு எல்லாம் சரியாக இருத் தன. விடியற்காலைக் கனவு பலித்தாலும் பாதிக்கு மாமே? அவன் மனசில் அந்தப் பயம் குடி கொண்டது. சில நாட்கள் கழிந்தன. செந்தில் சென்னையிலே வந்து வேலை ஒப்புக்கொண் டாய் விட்டது. அதைத் தொடர்ந்து அவனுக்குக் 'கலியா ணமும் நடந்தேறி விட்டது.